Advertisment

Ind vs Pak: அகமதாபாத்தில் எகிறும் ஓட்டல் ரூம் விலை… ஆஸ்பத்திரி பெட்-களை புக் செய்யும் ரசிகர்கள்

உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் அகமதாபாத்தில் ஓட்டல் ரூம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மருத்துவமனை படுக்கைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Fans book hospital beds ahead of IND vs PAK clash in Ahmedabad hotel price hike Tamil News

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

CWC - India vs Pakistan Ahmedabad Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. ஒவ்வொரு மைதானத்தையும் மேம்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலா 50 கோடி ரூபாய் என ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisment

இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்த தொடரில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. கிரிக்கெட்டில் பரம போட்டியாளராக வலம் வரும் இவ்விரு அணிகள் இந்திய மண்ணில் 2016ம் ஆண்டுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால், ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள். இதேபோல், வெளிநாட்டில் இருந்தும் ரசிகர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். அதனால், 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முக்கிய போட்டியை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த ஓட்டல் ரூம் விலை

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை நேரில் பார்க்க அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓட்டல் ரூம்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால், ரசிகர்கள் மருத்துவமனை படுக்கைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் ஒரு இரவுக்கு ரூ. 50,000 கட்டணமாக வசூல் செய்து வருகின்றன. ஆனால், மருத்துவமனை படுக்கைளில் தங்குவதற்கான விலை ரூ. 3,000 முதல் ரூ. 25,000 வரை தான் உள்ளது. இந்த விலையில், உணவு மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனையை உள்ளடக்கிய பேக்கேஜ் கொடுக்கப்படுகிறது. ரசிகர்களுக்கு, ஒரு நோயாளியும் உதவியாளரும் ஒன்றாக தங்கக்கூடிய இரண்டு படுக்கைகள் கொண்ட அறையை சில மருத்துவமனைகள் மிகவும் மலிவான விலையில் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

publive-image

இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ்டைகர் செய்தி நிறுவனத்துக்கு போபாலில் உள்ள சன்னித்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பராஸ் ஷா அளித்துள்ள பேட்டியில், "இது ஒரு மருத்துவமனை என்பதால், அவர்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் ஒரே இரவில் தங்கும்படி கேட்கிறார்கள். இதனால் அவர்களின் இரு நோக்கங்களும் நிறைவேறுகின்றன. தங்குமிடத்திற்கான பணத்தை மிச்சப்படுத்துகின்றன மற்றும் அவர்களின் உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்கின்றனர்." என்று கூறியுள்ளார்.

மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநர், டாக்டர் நிகில் லாலா பேசுகையில், "நாங்களும் எங்கள் மருத்துவமனையில் 24-48 மணிநேரம் தங்கியிருப்பதற்கான கோரிக்கைகளை பெற்று வருகிறோம், குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி, எங்களிடம் முழு உடல் பரிசோதனை தொகுப்பும் உள்ளது.

இது அக்டோபர் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்ட வரவிருக்கும் உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் காரணமாகும். எங்கள் மருத்துவமனைகளைப் போலவே, மற்ற நகர மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் தெரிகிறது. எனவே, மற்ற சுகாதார பேக்கேஜ்களுடன் வெளிவருவது குறித்து நாங்கள் யோசித்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports India Vs Pakistan Ahmedabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment