செல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு!
டெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுத்ததால் காது பகுதி உடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று அமைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டது.
[PICS]: @imVkohli‘s wax statue unveiled at Madame Tussauds, Delhi Today! pic.twitter.com/iBpQ6eJVCi
— Virat Kohli Fan Club (@TeamVirat) 6 June 2018
வீராட் கோலி சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர். ரசிகர்களின் இந்த செயலால் வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. இதனால் சிலையை அதிகாரிகள் உடனடியாக அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைக்கப்பட்டுள்ளார்.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.