நியூசிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்திருப்பதை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அணியை ரோகித் சர்மா வழிநடத்தினார். கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும்.ஆனால் எதிர்பாராத விதமான இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இதை குறிப்பிடும் வகையிலும், கோலி, தோனி இல்லாத ஆட்டம் எப்படி இருந்தது என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ்களால் இணையத்தை கதற வைத்துள்ளனர்.
இதோ அந்த மீம்ஸ்களின் தொகுப்பு..