Lionel Messi - Sachin Tendulkar Tamil News: அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இரவு 8:30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய நிலையில், பிரான்சை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி 36 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது.
கோப்பை முத்தமிட்ட மெஸ்ஸியின் சாதனைகள்
அர்ஜென்டினா அணியின் கேப்டனாக வலம் மெஸ்ஸிக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அவர் விளையாடும் அணியும் அவரும் கோப்பை முத்தமிட வேண்டும் பிராத்தனை செய்தனர். இதற்கு காரணம், மெஸ்ஸி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார் நம்மில் பலருக்கும் தெரியும்.
சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்ஸிக்கு இந்த உலகக்கோப்பையில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனை, அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்து அசத்தியது உள்ளிட்டவை அவரின் மிரட்டலான சாதனைகளாகும்.
28 - 36 வருட கனவு… அன்று சச்சினுக்கு; இன்று மெஸ்ஸிக்கு நடந்த அதிசயம்...
இந்நிலையில், மெஸ்ஸியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும், அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது அந்த கனவு நனவானது. தற்போது இதே சூழல் தான் நேற்று மெஸ்ஸிக்கும் நடந்தது.
இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, அர்ஜெண்டினாவின் 36 வருட கனவு மெஸ்ஸிக்காக நிறைவேறியுள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Sachin Tendulkar 🤝 Lionel Messi
Two legendary No. 10s have walked a similar path to their World Cup glory. 🏆#SachinTendulkar #LionelMessi #WorldCupFinal #FIFAWorldCup pic.twitter.com/KHJPqyl8rt— 100MB (@100MasterBlastr) December 19, 2022
India won World Cup after 28 years. 🇮🇳
Argentina won World Cup after 36 years. 🇦🇷
It was last world cups for both of them. GOATs of all time!
#FIFAWorldCup #WorldCup #Messi𓃵 #Sachin pic.twitter.com/RYhZyGMrvB— Akash Jain (@akash207) December 18, 2022
Number 10 ❤#Messi𓃵 #messi #SachinTendulkar #Martinez #dhoni #chiyaan @sachin_rt @Shebas_10dulkar pic.twitter.com/MUpAH8Rmom
— DON memes (@DON30299825) December 19, 2022
It took 22 years for Sachin Tendulkar and 18 years for Lionel Messi to win the World Cup! Don't get fooled with 'shortcuts to success'
S.U.C.C.E.S.S is a byproduct of - patience, relentless hardwork and mastering your skills. pic.twitter.com/4V9HxRdhc5— Anil_Jacob_IV🇮🇳 (@follow_amj) December 19, 2022
2022 it is #Messi 🔥🔥
2011 it was #Sachin 🔥🔥#ArgentinaVsFrance#football pic.twitter.com/qy4EQ43gwR— 🔥என்றும்தமிழன்🔥 (@tamilan_mj) December 19, 2022
Sachin Tendulkar in 2011 World Cup & Lionel Messi in 2022 World Cup - The perfect ending for Two GOATs.!! pic.twitter.com/uSMzq1U5Cb
— CricketMAN2 (@ImTanujSingh) December 18, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.