Advertisment

'என்னா மனுஷ்யன் யா'… விஜய் ஹசாரேவில் களமாடிய டி.கே-வை புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்!

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

author-image
WebDesk
Nov 29, 2022 14:02 IST
Fans on twitter react DK plays the Vijay Hazare Trophy Quarter Finals for TN Tamil News

Dinesh Karthik plays Vijay Hazare Trophy Quarter Finals for Tamil Nadu Tamil News

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். தேசிய அணியில் அவருக்கு தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும், அவ்வப்போது களமாடும் ஆட்டங்களில் தனது திறனை நிரூபித்து வந்தார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, அணியில் ஒரு ஃபினிஷராக உருவெடுத்து இருந்தார் டி.கே.

Advertisment
publive-image

இதன் காரணமாக, தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஃபினிஷராக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த போட்டிகளில் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்க தேச அணிகளுடன் இருதரப்பு தொடரில் விளையாடுகிறது. அந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு, தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்தது.

விஜய் ஹசாரேவில் களமாடிய டி.கே - புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்

இந்நிலையில், 37 வயதான தினேஷ் கார்த்திக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணியில் இணைத்துள்ளார் தினேஷ் கார்த்திக். நேற்று தமிழக அணி அதன் காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் களமாடி விளையாடி இருந்தார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி சார்பில் களமாடியது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதோடு, வர்ணனையாளராக மாறிய ஒரு வீரரை தாங்கள் பார்த்ததில்லை என்பது போன்ற கமெண்டுகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.

publive-image

சவுராஷ்டிரா அணி வெற்றி

குஜராத்தில் நடந்த தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான 4வது கால்இறுதி ஆட்டத்தில், 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா 8 விக்கெட்டுக்கு 293 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 249 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் சவுராஷ்டிரா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

தமிழக அணியில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 74 ரன்களும் (92 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபா இந்திரஜித் 53 ரன்களும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 9 ரன்கள் எடுத்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Dinesh Karthik #Cricket #Sports #Vijay Hazare Trophy #Tamilnadu Cricket Team #Twitter Response #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment