Cristiano-ronaldo: சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.
தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய கால்பந்து கிளப் அணியான அல்-நாஸ்ர் எஃப்சி அணியை வழிநடத்தி வருகிறார். தொழில்முறை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (865) அடித்தவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2022 ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனான லியோனல் மெஸ்ஸி, 821 கோல்களுடன் எலைட் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், ரொனால்டோவின் உணவு திட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று எக்ஸ் வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவர் ரமிஸ் ராஜா, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான உணவுத் திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்து கொடுப்பதாக குறிப்பிட்டார். “உதாரணமாக கால்பந்து விளையாட்டை எடுத்துக்கொள்வோம். நாசா விஞ்ஞானிகள் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உணவுத் திட்டத்தை அமைத்துள்ளனர்.
ரமிஸ் ராஜா ரொனால்டோவின் உணவு திட்டம் குறித்து பேசியது நெட்டிசன்கள் மத்தியில் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், சிலர் 'அதனால்தான் அவர் பி.சி.பி தலைவராக இல்லை' என்றும், 'அவரை நிலவுக்கு அனுப்ப வேண்டும்', 'வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலாக இருக்கும்' என்றும் கூறி அவரை கலாய்த்து வருகிறார்கள்.
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என அழைக்கப்படும் நாசா ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பொறுப்பான அமெரிக்காவின் சுயாதீன நிறுவனம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“