Advertisment

அஸ்வின் நீக்கம் சரியான முடிவா? நிபுணர்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

டாஸ் போட்ட பிறகு, ஆடும் லெவன் வீரர்கள் குறித்து பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Fans reaction Shardul Thakur replaces R Ashwin in playing XI IND vs AFG Tamil News

"ஆப்கானிஸ்தான் நல்ல ஸ்கோரைப் பெறுவதை உறுதிசெய்து, அதனை இந்தியா துரத்த ஷர்துல் தாக்கூரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்களா?" என்று ஒரு ரசிகர் கேள்வியெழுப்பியுள்ளார்.

worldcup 2023 | india-vs-afghanistan | ravichandran-ashwin: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கும்  9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisment

இதன்படி, பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முன்னதாக டாஸ் போட்ட பிறகு, ஆடும் லெவன் வீரர்கள் குறித்து பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்ட முடிவு குறித்து கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். டெல்லி ஆடுகளம் ஃபிளாட் பிட்ச் என்பதாலும், பவுண்டரி நீளம் குறைவு என்பதாலும் அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதில் சமாளித்து விடுவார்கள் என்றும், பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிடுவார்கள் என்றும் சில  நிபுணர்கள் கூறியுள்ளார்கள். சென்னை போன்ற மைதானங்களில் அவரது சுழல் வலையில் பேட்ஸ்மேன்கள் சிக்குவார்கள். ஆனால் டெல்லியில் மீடியம்ஃபாஸ்ட் வேலை செய்யும் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

"இந்தியா எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அஷ்வினை வெளியேற்றி ஷர்துல் தாக்கூரை சேர்த்துள்ளார். கடந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அவரை அணியில் சேர்ப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்." என்று ஒரு ரசிகர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

"ஆப்கானிஸ்தான் நல்ல ஸ்கோரைப் பெறுவதை உறுதிசெய்து, அதனை இந்தியா துரத்த ஷர்துல் தாக்கூரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்களா?" என்று ஒரு ரசிகர் கேள்வியெழுப்பியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup India Vs Afghanistan Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment