இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் போட்டியின் வர்ணனையின்போது பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமானார். இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான அந்த டெஸ்ட் போட்டியில் கார்த்திக்கின் வர்ணனை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் பேட் பற்றி கூறிய கருத்துகள், ட்விட்டரில் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, கார்த்திக் பேட்டைச்(கிரிக்கெட் மட்டை) சுற்றி கேள்விக்குரிய ஒப்புமைகளைக் கொண்டு வந்தார். அந்த ஒப்புமைகள் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
“பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட் மட்டைகளை போன்றவர்கள் அல்ல, அவர்கள் தங்கள் கைகளை நம்பி செல்கிறார்கள். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்கள் மட்டைகளை விரும்புவதாகத் தெரியவில்லை. அவர்கள் வேறொரு நபரின் மட்டையை விரும்புகிறார்கள், என்று தினேஷ் கார்த்திக் கூறினார். மேலும், “மட்டைகள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியைப் போன்றவை. அவர்கள் எப்போதும் அதை விரும்புகிறார்கள், ”என்றும் தினேஷ் கார்த்திக் கூறினார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த பாலியல் ரீதியிலான கருத்துக்களுக்கு ரசிகர்கள் ட்விட்டரில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil