ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6 ஆம் தேதி பகல்-இரவு (பிங்க் பால்) போட்டியாக தொடங்கி நாடடைபெறுகிறது. இப்போட்டிக்கு முன்னதாக, பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஆட பயிற்சி செய்வதற்காக, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமாடியது.
இந்தப் போட்டியின் தொடக்க நாளான நேற்று முன்தினம் சனிக்கிழமை மழை குறுக்கீடு செய்ததால் அன்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 2வது நாள் ஆட்டம் தொடங்க இருந்த போதும் மழை புகுந்து ஆடியது. பின்னர் மழை நின்றதால் ஆட்டம் தலா 46 ஓவராக நடத்தப்பட்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் 240 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிரட்டலான பவுலிங்கை ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 241 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 45 ரன்னுக்கு அவுட் ஆனார். 27 ரன் எடுத்த கே எல் ராகுல் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பெவிலியன் சென்றார். இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கில் இந்த பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 62 பந்துகளில் அரை சதம் எடுத்து அவரும் ரிட்டயர்ட் ஆனார்.
அதிரடியாக ஆடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். அடுத்து களமாடிய நிதிஷ்குமார் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதேபோல், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
ஜடேஜா 27 ரன்களும், சர்பராஸ் கான் 1 ரன்னும் எடுத்து திரும்பினர். முடிவில், இந்திய அணி 46 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து, 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்று வெற்றி இலக்கை கடந்த பிறகும் பயிற்சிக்காக 46 ஓவர் முழுவதையும் ஆடியது.
ரோகித்தை கலாய்க்கும் ரசிகர்கள்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக நடந்த வாரம்-அப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதால் அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர், "இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஓபன் செய்ய வாய்ப்பில்லை. இந்த தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் தொடக்க ஜோடியாக நன்றாக இருக்கிறார்கள். பேட்டிங் வரிசையில் 5வது இடத்தில் உள்ள ரோகித் சர்மா இந்திய அணிக்கு நல்ல நிலையில் உள்ளார்." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "வெற்றி பெற்ற அணியை மாற்றுவது சரியல்ல என்பதை இந்திய அணி நிர்வாகத்திற்கு நினைவூட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா." என்று பதிவிட்டுள்ளார். "ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக 2வது டெஸ்டில் களமிறங்கினால், ஆஸ்திரேலிய கணித்தபடி 1-க்கு 3 என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிராக தொடரை வெல்லும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகர்,"இருந்தா ரோகித் சர்மா மாதிரி இருக்கனும். ஃபைவ் ஸ்டார் மட்டும் சாப்பிட்டு விட்டு ஒரு வேலையும் செய்வது கிடையாது" என்று கூறி அவர் கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“