scorecardresearch

தங்கம் வென்ற மகன்… வா்ணனையாளராக தந்தை… அமெரிக்காவில் அரங்கேறிய சுவாரஸ்யம்!

Geoff Wightman on Commentary as Son Jake Takes 1500m Gold at World Athletics championships Tamil News: அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மகனை, வா்ணனையாளராக இருந்த தந்தை சாம்பியன் என்று குறிப்பிட்டு நெகிழந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வென்ற மகன்… வா்ணனையாளராக தந்தை… அமெரிக்காவில் அரங்கேறிய சுவாரஸ்யம்!
Jake Wightman, of Britain, wins the men's 1500-meter final run at the World Athletics Championships on Tuesday, July 19, 2022, in Eugene, Ore. (AP Photo/Ashley Landis)

Jake Wightman Tamil News: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், இங்கிலாந்து தடகள வீரர் ஜேக் வைட்மேன், பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.23 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், நாா்வே வீரருமான ஜேக்கப் இங்கெப்ரிட்சென் 3 நிமிடம் 29.47 வினாடிகளில் 2வது இடம் பிடித்தார். ஸ்பெயினின் முகமது கட்டிருக்கு 3வது இடம் கிடைத்தது.

கடந்த 39 ஆண்டுகளில் உலக தடகள சாம்பியன்ஷிப் 1500 மீட்டரில் இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இதுவாகும். அதை ஜேக் வைட்மேன் தட்டிச் சென்ற நிலையில், அவருக்கு ரசிகர்களும், இங்கிலாந்து நாட்டின் மக்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

மைதானத்தில் அரங்கேறிய சுவாரஸ்ய சம்பவம்…

இந்த ஓட்ட பந்தயத்தின் போது, மைதான வா்ணனையாளராக இருந்தவா் ஜேக் வைட்மேனின் தந்தை ஜியோஃப் வைட்மேன். ஜேக் வைட்மேனின் தாய் சூசன் நீ டூபி அங்கிருந்த ஸ்டாண்டில் நின்றுகொண்டு மகன் ஓடுவதை கண்டுகளித்து கொண்டிருந்தார். ஓட்டப்பந்தயம் தொடங்கி வீரர்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.

இறுதிச் சுற்று ஓட்டத்திற்கு வீரர்கள் முன்னேறி கொண்டிருந்த நிலையில், திடீரென்று, ஜேக் விலகிச் செல்லத் தொடங்கினார். அவரை நடப்புச் சாம்பியனான இங்கெப்ரிட்சென் கடந்தார். ஆனால், முயற்சியை கைவிடாத ஜேக் மீண்டும் அவரை முன்னேறி ஓடினார். ஆனாலும், இங்கெப்ரிட்சென் இடு கொடுத்து ஓடினார். எனினும் ஜேக்கை பிடிக்க முடியவில்லை.

இந்த தருணத்தில் வர்ணனை பெட்டியில் இருந்த ஜியோஃப் எழுந்து நின்று வர்ணனை செய்யத் தொடங்குகிறார். ஜேக் இறுதிக் கோட்டை கடக்கும் முன்பு, யாரோ ஒருவர் அவரது தோளில் வாழ்த்துக்கள் கூறி தட்டுகிறார். அப்போது ஜியோஃப், “ஜேக் வைட்மேன் தனது வாழ்க்கைக்கான ஓட்டத்தை முடித்துவிட்டார்!” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார். மேலும், ஜேக் சாம்பியன் ஆன தருணத்தில் உணர்ச்சி பொங்கி இருந்த ஜியோஃப் அதே தழுதழுத்த குரலில் ஜேக்கின் பெயரை சாம்பியனாகக் குறிப்பிட்டு, அவா் தனது மகன் என்றும் அறிவிக்கிறார்.

இந்த பந்தயத்தை முடித்து, மைதானத்தின் தரையில் இருந்து எழுந்த ஜேக், சுற்றிப் பார்த்து, தன் தாயைக் கண்டு, படிக்கட்டில் ஏறி ஓடுகிறார். அவர் இறுதிக் கோட்டை நெருங்கியதும், அவரது தாயார் கைகளைத் தட்டி மகிழ்ச்சியில் கத்திக் கொண்டிருந்தார். இப்போது, ​​அவர் தன் மகனைக் கட்டி அனைத்துக் கொள்ள செல்கிறார். இதுபோல் ஜியோஃப்-வும் படிக்கட்டுகளில் வேகமாகச் செல்வதை வீடியோவில் காணலாம்.

இந்த நம்பமுடியாத வெற்றிகளிப்பை ஜேக் கொண்டாடுகையில், கேமரா ஜெஃப் பக்கம் செல்கிறது. அப்போது அவர், “என்னிடம் கேமரா ஏன் இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அது என் மகன். நான் அவருக்கு பயிற்சி அளிக்கிறேன். அவர் இப்போது உலக சாம்பியன்!” என்று பெருமையுடன் கூறுகிறார்.

ஜேக்கின் குடும்ப பின்னணி…

Geoff and Susan Wightman pose with their son Gold medalist Jake Wightman after the men’s 1500-meter final run at the World Athletics Championships on Tuesday, July 19, 2022, in Eugene, Ore. (AP Photo/Ashley Landis)

தடகள வீரர் ஜேக் வைட்மேனின் குடும்பம் ஒலிம்பிக் உட்பட பல சர்வேதச போட்டிகளில் பதக்கங்களை அள்ளிய விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நிறைந்த குடும்பம் ஆகும். அவரது அப்பா ஜெஃப் வைட்மேன் 1990 இல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ஆறாவது இடத்தைப் பிடித்த ஒரு மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஆவார். அவரது அம்மா ஒரு ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். அவர் 1998 சியோலில் 12வது இடத்தைப் பிடித்தார். அவரது அம்மாவின் ஒரே மாதிரியான இரட்டையர் சகோதரி ஒரு ஒலிம்பிக் வீராங்கனை ஆவர். அவர் 1990 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Father commentates as son jake wightman clinches worlds 1500m gold viral video