Tennis legend Roger Federer Tamil News: டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். இவர் தற்போதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். 14 கிராண்ட்ஸ்லாம்களுக்கு மேல் வென்ற முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்தவர்.
இந்நிலையில், ரோஜர் ஃபெடரர், இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் வருகை தந்த புகைப்படங்களுடன் ‘வாத்தி கம்மிங்’ என்று குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் விம்பிள்டன் நிர்வாகம் பகிர்ந்துள்ளது. தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

‘வாத்தி கம்மிங்’ பாடல்:
நடிகர் விஜய்யின் நடித்து வெளிவந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இடம்பெற்று இருந்தது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார்.
‘வாத்தி கம்மிங்’ பாடல் தமிழில் மட்டுமல்லாது, இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் யூ-டியூபில் 37 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து, வெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்தது. தவிர, கடந்த சில ஐ.பி.எல். சீசனுக்கு முன்னர் வீரர்கள் இந்த பாட்டுக்கு நடனமாடி இருந்தனர்.
இந்த நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடல், தற்போது விம்பிள்டன் வரை சென்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ்:
டென்னிஸ் உலகில் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக விம்பிள்டன் டென்னிஸ் இருந்து வருகிறது. கடந்த 1877ம் ஆண்டு முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று விம்பிள்டன் டென்னிஸ் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ரோஜர் ஃபெடரர், விம்பிள்டனில் “இன்னும் ஒரு முறை” விளையாடுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.


With eight singles titles to his name, @rogerfederer 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/ucGLn0wW6q
— Wimbledon (@Wimbledon) July 3, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil