FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் மெக்சிகோவும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. இதில், மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது. 31 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
இதில், மெக்சிகோவில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 13 நிமிடத்திலேயே மெக்சிகோ அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
கார்லஸ் வேலா தட்டிக் கொடுத்த பந்தை ஜியோவனி தாஸ் சாண்டோஸ் கோலாக மாற்றினார். இதனால் 1-0 என்ற கணக்கில் மெக்சிகோ முன்னிலை பெற்றது. ஆனால், அதன்பின் இரு அணிகளாலும் கடைசி வரை கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் மெக்சிகோ வெற்றிப் பெற்றது. அடுத்த சனிக்கிழமையன்று (ஜூன் 9) மெக்சிகோ அணி தனது கடைசி பயிற்சிப் போட்டியில், டென்மார்க் அணியுடன் மோதவிருக்கிறது.
உலகக்கோப்பையில் 'F' பிரிவில் இருக்கும் மெக்சிகோ அணி, ஜூன் 17 அன்று தனது முதல் போட்டியில் 'உலக சாம்பியன்' ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் தென்கொரியா, சுவீடன் அணிகளை எதிர்கொள்கிறது.