New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/a65-1.jpg)
first tamil wrestler, jey jackson, sports news, latest sports updates, ரெஸ்ட்லிங், மல்யுத்தம், விளையாட்டு செய்திகள்
first tamil wrestler, jey jackson, sports news, latest sports updates, ரெஸ்ட்லிங், மல்யுத்தம், விளையாட்டு செய்திகள்
தமிழகத்தில் கிரிக்கெட் எந்தளவுக்கு பிரபலமோ, அதற்கு இணையாக ரசிகர்களின் பேவரைட்டாக வலம் வருவது ரெஸ்ட்லிங். WWE என்று கார்டுகள் வைத்து 90'ஸ் கிட்ஸ் விளையாடியிருப்பர். ராக், ஜான் சினா, கேன் தொடங்கி இந்தியாவின் தி கிரேட் காளி வரை பலருக்கும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.
ஆனால், இதுவரை ரசிகர்களாக ஒருவராக மட்டும் கொண்டாடிய ஒரு நபர் நீங்கள் ரசிக்கும் ரெஸ்ட்லராக உருவெடுத்தால், அவரே WWE ரிங்-குக்குள் நின்று எதிராளியை பந்தாடினால்....? ஆம்! தமிழகத்தில் ஒரு வீரர் ரெஸ்ட்லிங் ரிங் ஏறி கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்திருக்கிறார், CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன்.
'ஐயோ... இந்திய அணி பற்றி நான் அப்படி சொல்லவே இல்ல' - பதறும் பென் ஸ்டோக்ஸ்
இதுகுறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " என் உண்மையான பெயர் ஜெயபாண்டியன். ஜெய் ஜாக்சன்றது ரிங் நேம். திண்டுக்கல் மாவாட்டம், நிலக்கோட்டை பக்கத்தில் முத்துக்காமன்பட்டி என்ற கிராமத்துல, ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பையன் நான். எனக்கு நான்கு அண்ணன்கள். அதில் எனக்கும் எனக்கு நேர் அண்ணனுக்கும் தினமும் ரெஸ்லிங் விளையாடுறதுதான் வேலை. ஹார்ட்கோர் மேட்ச் விளையாடி, டி.வியை உடைச்சு, இரண்டு பேருமே வீட்டில் வகைவகையாக அடி வாங்கியிருக்கோம். இப்படி ஆரம்பிச்ச ரெஸ்லிங் ஆர்வம்தான், இந்த இடத்துக்கு என்னை நகர்த்திக்கொண்டு வந்திருக்கு.
`WWE ரிங்ல, மைக் பிடிச்சு தமிழ்ல பேசணும்ங்கிறது என் மிகப்பெரிய ஆசை. நான் தமிழ்ல ப்ரோமோ கட் பண்ணணும், அதைக் கேட்டு தமிழ் ரசிகர்கள் ஆரவாரமாகணும். பிறகு, WWE-ல் ஒரு சாம்பியன்ஷிப் ஜெயிக்கணும்னு ஆசை" என்று எதிர்கால கனவுகளை அடுக்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.