Advertisment

இங்கிலாந்திடம் உதை வாங்கிய பாகிஸ்தான்... டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை!

Pakistan vs England 1st Test Match Result: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில், டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரு அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 First Time in Cricket History Pakistan Register UNWANTED World Record After Humiliating Loss vs England Tamil News

Pakistan vs England: முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் - ஹாரி புரூக் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இருவரும் இணைந்து தங்களது அணிக்காக 454 ரன்களை குவித்தனர்.

Pakistan Loose Test Against England After Scoring 500 Runs in 1st Inning: 

Advertisment

பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் நிலையில், அந்த அணிமுதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர். 

இதையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அப்துல்லா ஷபீக் ரன் எதுவும் எடுக்காமலும் , சைம் ஆயுப் 25 ரன்களும், ஷான் மசூத் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஆகா சல்மான் சிறப்பாக விளையாடினார்.இறுதியில் நேற்றைய 4-ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்திருந்தது. ஆகா சல்மான் 41 ரன்களுடனும், அமீர் ஜமால் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று 5-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி  2-வது இன்னிங்சில் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 220 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அப்ரார் அகமது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேட்டிங் செய்ய வரவில்லை. இதன் மூலம் 47 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆகா சல்மான் 63 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. அதாவது, டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரு அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முல்தான் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. ஆனால், 2-வது இன்னிங்சில் 220 ரன்கள் மட்டுமே எடுத்து, 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் - ஹாரி புரூக் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இருவரும் இணைந்து தங்களது அணிக்காக 454 ரன்களை குவித்தனர். இதன் மூலம், இரண்டு 200 ரன்களை இங்கிலாந்து அணியாக குவித்த முதல் ஜோடி என்கிற பெருமையைப் பெற்றனர். சர்வதேச அரங்கில் அத்தகைய சாதனையை எட்டிய 9வது ஜோடியாகவும் ஆனார்கள். 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன் முதல் ஜோடி என்கிற பெருமையையும், சர்வதேச அரங்கில் அத்தகைய சாதனையைப் படைத்த 4-வது ஜோடி என்கிற பெருமையையும் பெற்றனர். ரூட் 375 பந்துகளில் 17 பவுண்டரிகளை மட்டும் விரட்டி 262 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதே நேரத்தில் முச்சதம் அடித்த ஹாரி புரூக் 322 பந்துகளில் 29 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 317 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 3 சதங்கள் விளாசியதன் மூலம், 34 ஆண்டு கால டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்கிற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pakistan Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment