கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் மரணம்

அர்ஜெண்டினா அணி கால்பந்து உலகக் கோப்பை வெல்வதற்கு காரணமான கால்பந்து ஜாம்பவான் மாரடோனா புதன்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

football player diego maradona passes away, கால்பந்து வீரர் மாரடோனா மரணம், maradona died, மாரடோனா மரணம், மாரடோனா மாரடைப்பால் மரணம், diego maradona died, diego maradona cariac arrest, maradona died, argentina, argentina football world cup winner maradona

அர்ஜெண்டினா அணி கால்பந்து உலகக் கோப்பை வெல்வதற்கு காரணமான கால்பந்து ஜாம்பவான் மாரடோனா புதன்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

எல்லா காலத்திலும் கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கும் கால்பந்து வீரர்களுக்கும் விருப்பமான வீரராக இருந்தார் கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா. அர்ஜெண்டினா அணிக்காக விளையாடிய இவர் அந்த அணி 1986ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். மாரடோனாவின் அபாரமான கால்பந்து ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

மாரடோனாவுக்கு கடந்த 2005ம் ஆண்டு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 60 வயதான மாரடோனாவுக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் அவர் அறுவை சிகிச்சைக்காக நவம்பர் மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆன நிலையில், புதன்கிழமை மாரடோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Football player diego maradona passes away

Exit mobile version