Advertisment

அ.தி.மு.க ஜெயக்குமார் கணிப்பு: 'வேணும்னா பாருங்களேன்... கோப்பை இந்த அணிக்குத்தான்!'

'தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்' என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

author-image
WebDesk
New Update
சி.வி சண்முகம் கூறியது நிஜம்; பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடிக்கிறது: ஜெயக்குமார்

Former AIADMK minister D Jayakumar - Lionel Messi - Argentina vs France, World Cup Final 2022 Tamil News: அரபு நாடான கத்தாரில் நடந்து வரும் 22வது கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும் சாம்பியன் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

Advertisment
publive-image

நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால், அந்த அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து, தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அர்ஜென்டினா அதன் அரையிறுதி ஆட்டத்தில் குரோசியா அணியை எதிர்கொண்ட நிலையில், அந்த அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய மெஸ்சி கோல் அடித்து மிரட்டினார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க உதவியும் இருந்தார்.

முன்னதாக, 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா, இம்முறை அதை வசப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. மறுபுறம், நடப்பு சாம்பியனான பிரான்சும் படு சூட்டாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது என்பதில் சந்தேகமில்லை.

அர்ஜென்டினா vs பிரான்ஸ்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

publive-image

இந்நிலையில், கால்பந்து உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா மற்றும் அணியின் கேப்டன் மெஸ்ஸி குறித்து உறுதிபட கருத்தை தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்' என்றும் கூறி கணித்துள்ளார்.

publive-image

"உலகக் கோப்பை கால்பந்து போட்டியை யார் வெல்லப்போவது? என்ற கேள்வியை என்னைப் போன்ற கால்பந்து ரசிகர்கள் எதிர்நோக்குகிறார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்பது தான் நம் அனைவருடைய எதிர்ப்பார்ப்பு. என்னுடைய கருத்து என்பது நிச்சயமாக மெஸ்ஸி வெல்வார். ஏன் என்று சொன்னால், அவர் அபார திறமை பெற்றவர். பிரான்சும் - அர்ஜென்டினாவும் மோதும் நிலையில், அர்ஜென்டினா கண்டிப்பாக வெல்லும்.

மெஸ்ஸியைப் பொறுத்தவரை, அவரால் அர்ஜென்டினா குழு வெற்றி பெற்றது என்பது ஒரு வரலாறு. அவரிடமுள்ள மற்றொரு சிறப்பு, தான் என்ற அகந்தை என்றைக்குமே மெஸ்ஸிக்கு கிடையாது. ஒரு டீம், ஒரு குழு என்ற அடிப்படையிலே, பொதுவாக எல்லோருக்குமே வாய்ப்பு தருவார். தன்னால் தான் தனது நாடு வெற்றி பெற்றது என்ற நிலை வராத அளவிற்கு, டீமில் உள்ள எல்லோருக்குமே வாய்ப்பு கொடுப்பார். அவர்களையும் உற்சாகப்படுத்தும் வல்லமை படைத்தவர் தான் மெஸ்ஸி.

publive-image

அவர் இந்த இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே, உலகமே உற்றுநோக்கும் இந்த போட்டியில் மெஸ்ஸியால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு உள்ளது. அவர் நிச்சயம் வெல்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. அவரிடம் பிடித்த மற்றொரு சிறப்பம்சம், அவர் எதிரணிகளின் வியூகங்களை முறியடிக்க கூடியவர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வியூகம் இருக்கும். அவற்றை முன்பே தெரிந்து வைத்திருப்பவர் மெஸ்ஸி. எனவே, பிரான்ஸை அவரது தலைமையிலான அணி வீழ்த்திய கோப்பை கைப்பற்றுவது உறுதி." என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Aiadmk Admk Sports Football France Lionel Messi Argentina Fifa Fifa World Cup D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment