Japan vs Spain Highlights and Controversy in tamil: 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள கலிபா இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் – ஸ்பெயின் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின்முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் அல்வோரா மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால், முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் தனது அணிக்கான முதல் கோலை அடித்து போட்டியை சமன் பெறச் செய்தார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஆவ் டனாகா இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். அடுத்ததாக, இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. இறுதியில், ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தியது.
இந்த அசத்தில் வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது. அதேவேளையில், ஸ்பெயினின் அதிர்ச்சி தோல்வியால் அதே பிரிவில் இருந்த ஜெர்மனி
உலக கோப்பையில் வெடித்த அடுத்த சர்ச்சை: ஜப்பான் அடித்த 2வது கோல் சரியா?
இதுஒருபுறமிருக்க, இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி வீரர் ஆவ் டனாகா அடித்த இரண்டாவது கோல் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
Angles mean everything… what looks out from the side is, in reality, in play from above.. #ESP #JAP #Qatar2022 pic.twitter.com/5BraYqldND
— Chris Williams (@Chris78Williams) December 1, 2022
ஜப்பான் அணி அதன் 2வது கோலை பதிவு செய்யும் முன், கௌரு மிதோம பந்தை ஆவ் டனாகாவுக்கு கிராஸ் அடித்தார். அதன்பின்னர் பந்தை ஆவ் டனாகா கோல் அடித்தார். அவர் அடித்த கோல் லைன்ஸ்மேன்னால் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், நீண்ட VAR சோதனைக்குப் பிறகு, கோல் என்று முடிவு செய்யப்பட்டது.
டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆரம்பக் கோணங்கள் பந்து கோடை தாண்டிவிட்டதாக காட்டியது. ஆனால், ஏரியல் வியூவில் (வான்வழிக் காட்சி) பந்து உண்மையில் மில்லிமீட்டர்களில் கோட்டின் உள்ளே இருப்பதாக காட்டியது. டெய்லி மிரரின் கூற்றுப்படி, ஃபிஃபா சட்டத்தில், “பந்தின் வளைவு கோட்டிற்கு மேல் இருந்தால்” பந்து உள்ளே இருப்பதாக கூறுகிறது. இது கோல் லைன் கேமராக்கள் உட்பட மறுபதிப்புகளைக் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்யப்பட்டது.
“எனது கோணத்தில், பந்து தெளிவாக பாதி அவுட்டாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் அதை விட வேகம் காரணமாக என்னால் பார்க்க முடியவில்லை. நான் கோல் அடிப்பதில் கவனம் செலுத்தினேன். அது அவுட் ஆகும் வாய்ப்பு எப்போதும் இருந்தது. ஆனால், முடிவில் பந்து கோல் ஆனது.” என்று ஜப்பான் வீரர் ஆவ் டனாகா கூறியுள்ளார்.
ஆனாலும், ஆவ் டனாகாவால் அடிக்கப்பட்ட அந்த 2வது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது கோல் தான் என்று சிலரும், அது கோல் இல்லை என்றும் சிலர் சமூக வலைதளங்களில் வாதிட்டு வருகின்றனர்.
குரூப் ஈ பிரிவில் ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அடுத்ததாக குரோஷியாவை எதிர்கொள்கிறது. எப் பிரிவில் வெற்றி பெற்ற மொராக்கோவை ஸ்பெயின் எதிர்கொள்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil