scorecardresearch

FIFA World Cup: ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோ… இத்தனை தண்டனைகளா?

ரசிகர் ஒருவரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதமும், 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Cristiano Ronaldo fined news in tamil
Cristiano Ronaldo fined, handed a 2-match suspension for smashing young fan's phone Tamil News

News about Cristiano Ronaldo in tamil: சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.

தற்போது ரொனால்டோ கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் களமாட இருக்கிறார். அவரை ஆடுகளத்தில் காண உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோ… இத்தனை தண்டனைகளா?

இந்நிலையில், ரசிகர் ஒருவரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதமும் 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நிலையில், தற்போது ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இருப்பினும், அவர் அடுத்து இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பால் போட்டியில் பங்கேற்காத சூழல் ரொனால்டோவுக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு போட்டிகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் FA விதி E3 ஐ மீறியதற்காக அவரது எதிர்கால நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்டது.” என்று கூறியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Football news download Indian Express Tamil App.

Web Title: Cristiano ronaldo fined news in tamil