Cristiano Ronaldo signs for Al Nassr Tamil News: சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.
சமீபத்தில் ரொனால்டோ கத்தாரில் கோலாகலமாக நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணிக்காக களமாடி விளையாடினார். எனினும், அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றில் மொராக்கோவிடம் தோல்வியுற்று வெளியேறியது.
சவூதி கிளப் அணியில் இணைந்த ரொனால்டோ: ரூ.1770 கோடிக்கு ஒப்பந்தம்
இந்நிலையில், சவுதி அரேபியா கிளப் அணியான அல்-நாசர், ரொனால்டோ தங்கள் கிளப் அணியில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. ரியாத்தில் உள்ள அல்-நாசர் கிளப் அணியில் 2 1/2 ஆண்டுகள் ரொனால்டோ விளையாட, அவருக்கு ரூ.1770 கோடியை வழங்கியுள்ளது.
இன்று (டிசம்பர் 31) அதிகாலையில், சவுதி கிளப் அல்-நாசர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இலவச பரிமாற்றத்தில் ஒப்பந்தம் செய்வதாக அறிவித்தது. ரொனால்டோ தனது இரண்டரை ஆண்டு கால ஒப்பந்தத்தின் மூலம் (ஜூன் 2025 வரை) ஒரு வருடத்திற்கு சுமார் 200 மில்லியன் (ரூ.1770 கோடி) (வாரத்திற்கு சுமார் 3.4 மில்லியன் யூரோ விதம்) மதிப்புடைய ஒரு தொழில்முறை கால்பந்து வீரருக்கான அதிகபட்ச சம்பளத்தை பெற உள்ளார். அனைத்து வணிக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்ட பிறகு, கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.
History in the making. This is a signing that will not only inspire our club to achieve even greater success but inspire our league, our nation and future generations, boys and girls to be the best version of themselves. Welcome @Cristiano to your new home @AlNassrFC pic.twitter.com/oan7nu8NWC
— AlNassr FC (@AlNassrFC_EN) December 30, 2022
மான்செஸ்டர் கிளப்பில் இருந்து வெளியேற்றம்
ரொனால்டோ கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் அவர் 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய ரொனால்டோ, கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார். கிளப் நிர்வாகம், மேலாளர் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.
இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.