Chennai Nehru Stadium Tamil News: 11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிகள் கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14 ஆம் தேதி) இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி அணி, முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சியுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தன. இதனால் சென்னை – பெங்களூரு அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
நேரு ஸ்டேடியத்தில் சுத்தமில்லா கழிவறைகள் – ட்விட்டரில் வெடித்த புகார்
சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய நிலையில், அங்கு சுத்தமில்லா கழிவறைகள், இருக்கைகள் இல்லாத ஸ்டாண்டுகள் குறித்து ட்விட்டரில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையின் எஃப்சி ரசிகை ஜெனி ஷாராணி தனது ட்விட்டரில் பக்கத்தில், சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள இ பிளாக் 1ல் உள்ள பெண்கள் ஓய்வறைகளின் (கழிவறைகளின்) நிலை இதுதான்.
சிலவற்றில் கதவுகள் இல்லை அல்லது கதவுகள் பாதி வழியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. சரியான கதவுகள் இல்லாமல் எப்படி பயன்படுத்த முடியும்? நாங்கள் எப்படி அவற்றைப் பயன்படுத்த இயலும்?
இரண்டு க்யூபிகல்களில் மட்டுமே செயல்படும் கதவுகள் உள்ளன. அவையும் இப்படித்தான் இருக்கின்றன. நாங்கள் மைதானத்திற்கு வருவதை ஏன் இன்னும் கடினமாக்குகிறீர்கள்?” என்று பதிவிட்டு கேள்வியெழுப்பினார்.
Only two cubicles have functioning doors and this is how they are.
— Jeni (@JenishaRani) October 16, 2022
Why make it more difficult for us to come to the stadium? 😡 @sdat_gov pic.twitter.com/opEhrQ43Ga
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தைப் பொறுத்தவரை, அவை தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தான் மேற்பார்வை முதல் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வருகிறது. சென்னை நடைபெறும் ஐஎஸ்எல் போட்டிகளின் போது சென்னையின் எஃப்சி அணி (CFC) ‘மெரினா அரீனா’ ஆடுகளத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறது. அதே சமயம் தெற்கு கிளப் போட்டி நாட்கள் மற்றும் போட்டி நாட்கள் கழித்தல் (விளையாட்டு நாட்களுக்கு ஒரு நாட்களுக்கு முன்பு) மட்டுமே ஸ்டேடியத்தை வாடகைக்கு எடுக்கிறது.
ஜெனிஷா குறிப்பிட்டு புகார் எழுப்பிய இ ஸ்டாண்ட் லெவல் 1 பொதுவாக அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும். ஏனெனில் சூப்பர் மச்சான்ஸ் (Supermachans) இணைய பக்கத்தில் உள்ள ரசிகர்கள் அங்கு கூடுகிறார்கள். ஆனால், அவர்கள் அடுத்த முறை மைதானத்தில் இருந்து போட்டியை ரசிக்க முயாத வகையில், மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுகளில் பயன்படுத்த முடியாத கழிவறைகள் மற்றும் பழுதுபார்க்கப்படாத அல்லது இருக்கைகள் இல்லாத நிலையில் காணப்படுகின்றன. இது ரசிகர்களை மிகவும் வேதனையடைய செய்துள்ளது.
தமிழக அமைச்சர் ரியாக்ஷன்
இந்நிலையில், நேரு ஸ்டேடியத்தை நேரில் சென்று பார்வையிடுவேன் என்றும், வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு சிவா வி மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று தனியார் செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், “திங்கள்கிழமை மைதானத்தைப் பார்வையிடுவேன். வருகிற வெள்ளிக்கிழமைக்குள் அது தயாராகிவிடும் (சென்னையின் அடுத்த ஐஎஸ்எல் ஹோம் ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக விளையாடும் போது)” என்று கூறியுள்ளார்.
Update: Sports Minister @SMeyyanathan Sir has promised to visit the stadium today and get it ready by Friday before our next home game.
— Jeni (@JenishaRani) October 17, 2022
Via @dt_next
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil