Cristiano Ronaldo In Spat With South Korean Player During Portugal's Loss In World Cup Tamil News
News about Portugal - south Korea, Cristiano Ronaldo in tamil: 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு குரூப் எச் பிரிவில் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் தென் கொரியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.
Advertisment
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், போட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே போர்சுகல் வீரர் ஹோர்ட்டா மிரட்டலான கோல் அடித்து அசத்தினார். வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறமுடியும் என்ற வெறியோடு விளையாடிய தென் கொரியா 27வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.
பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரிய வீரர் ஹீ சான் அசத்தலான கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரிய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வருகிற 6 ஆம் தேதி நடக்கும் ரவுன்ட் ஆஃப் 16 என்ற நக்-அவுட் சுற்றில் தென்கொரிய அணி பிரேசில் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Advertisment
Advertisements
தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த ரொனால்டோ
இந்நிலையில், போர்ச்சுகல் - தென் கொரிய அணிகள் மோதிய ஆட்டத்தில், போர்ச்சுகல் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, களமிறங்கத் தவறியதற்காக தென் கொரிய வீரர் ஒருவருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகக் கூறினார்.
"மாற்று வீரராக இருந்தபோது அது நடந்தது. கொரிய வீரர் என்னை விரைவாக வெளியேறச் சொன்னார். நான் அவரை அமைதியாக இருக்கச் சொன்னேன். ஏனெனில், என்னை விரைவில் வெளியேற சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
நான் விரைவாகச் செல்லவில்லை என்றால், நடுவர் தான் அவ்வாறு கூற வேண்டும். எந்த ஒரு சர்ச்சையும் இருக்கக்கூடாது. அது இந்த நேரத்தில்தான் நடந்தது." என்று கூறியுள்ளார் ரொனால்டோ.
இதுகுறித்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பேசுகையில், "கொரிய வீரர் மீது அவர் கோபமாக இருந்ததை அனைவரும் பார்த்தனர். வீரர் அவரை அவமானப்படுத்தினார். அவரை ஆடுகளத்தை விட்டு வெளியேறச் சொன்னார். அதனால் அவர் கோபமடைந்தார். எல்லோரும் அதைப் பார்த்தார்கள். நான் கொரிய வீரருடனான உரையாடலைப் பார்த்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இருப்பினும், ரொனால்டோவுக்கும் தென் கொரிய வீரருக்கும் இடையே நடந்த வார்த்தைப்போரை கட்டுக்குள் கொண்டு வர மிட்பீல்டர் ஹ்வாங் இன்-பியோம் முயன்றார்.