Volodymyr Zelenskyy – FIFA World Cup Qatar 2022 Tamil News: 22வது கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அரபு நாடான கத்தாரில் பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இத்தொடரில் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும் சாம்பியன் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.
ஒன்றுபட்ட ரஷ்யாவில் (Union of Soviet Socialist Republics (USSR)) பெரிய மாகாணமாக இருந்தது உக்ரைன். 1990-களின் பிற்பகுதியில் யூஎஸ்எஸ்ஆர் பல நாடுகளாக உடைந்த நிலையில், அதில் உக்ரைனும் ஒரு நாடாக உடைந்து போனது. கடந்த சில ஆண்டுகளாக நார்த் அட்லாண்டிக் ட்ரீட்டி அமைப்பு (NATO) உடன் உக்ரைன் உறுப்பு நாடாக மாறப்போவதாக தெரிவித்து வந்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்வினை ஆற்றி வந்தது. இந்த நிலையில், அது இந்தாண்டு பிப்ரவரியில் உச்சத்திற்கு சென்றது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 24, ஆம் தேதி அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து. தொடர்ந்து குண்டு மழை பொழிந்தும், ராக்கெட்டுகளை ஏவியும் தலைநகர் கீவ்-வை சுற்றி வளைக்க முடித்து செய்துள்ளது. எனினும், தற்போது பனிக்காலம் என்பதால் படையெடுப்பு வேகத்தை குறைத்துள்ளது. ஆனால், உக்ரைனை கைப்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முக்கிய முடிவுகளை எடுக்க தொடர்ந்து தாமதம் செய்து வருகிறார். மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களையும், பணத்தையும், அவர்களின் பேச்சுக்கும் தான் தொடர்ந்து செவிமடுக்கிறார். அவ்வப்போது கேமரா முன் தோன்றும் அவர், தான் நாடாக நடிகர் என்பதை நிரூபித்து விடுகிறார். போரால் மாண்டு போகும் வீரர்கள் குறித்தும், உக்ரைன் நாட்டு மக்கள் குறித்தும் அவர் பெரியதாய் கவலை கொண்டதாக தெரியவில்லை.

தற்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஃபிஃபா அமைப்போ அவரின் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை முன்னதாக, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ உலகக் கோப்பையின் போது உக்ரைனில் போர் நிறுத்தம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஃபிஃபா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது. கத்தாரில் உள்ள ஸ்டேடியத்தில் வீடியோ இணைப்பு மூலம் தோன்றுவதற்கு ஜெலென்ஸ்கி தயாராக இருந்தார் என்றும், அவரது அணுகுமுறை மறுக்கப்பட்டது என்றும் ஃபிஃபா தலைவர் கூறியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இன்ஃபான்டினோ கத்தாரில் சில “அரசியல் அறிக்கைகளை” நிறுத்திவிட்டோம். ஏனெனில், அனைவரையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு உலகளாவிய அமைப்பு மற்றும் நாங்கள் யாருக்கும் எதிராக பாகுபாடு காட்ட மாட்டோம்.
நாங்கள் மதிப்புகளைப் பாதுகாக்கிறோம், உலகக் கோப்பையில் ஒவ்வொருவரின் மனித உரிமைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கிறோம். அந்த ரசிகர்களும், கோடிக்கணக்கானவர்களும் டிவியில் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர்களின் சொந்த பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் 90 அல்லது 120 நிமிடங்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிறிய தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து கால்பந்தை ரசிக்கும் தருணத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, கால்பந்து நிர்வாகக் குழு ரஷ்ய கால்பந்து அணியை நடப்பு உலகக் கோப்பை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil