FIFA World Cup 2022: Brazil’s route to final explained Tamil News: 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தத் தொடரில் தற்போது நாக்-அவுட் சுற்று போட்டிகள் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இதில், தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது ஜாம்பவான் அணியான பிரேசில்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. தற்போது 6வது முறையாக சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், தற்போது பிரேசில் அணியின் இறுதிப் போட்டிக்கான வழியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: ‘அது உண்மையல்ல’: சவுதி கிளப் அணியில் இணைந்தது பற்றி ரொனால்டோ மறுப்பு
பிரேசில் நாக் - அவுட் (ரவுண்ட் ஆஃப் 16) சுற்றுக்கு எப்படி தகுதி பெற்றது?
- ஒவ்வொரு உலகக் கோப்பை அணிகள் குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக் அவுட் சுற்றுகள் டிச. 3-ல் தொடங்கியது. இந்த ஆட்டங்களில் கூடுதல் நேரம் மற்றும் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம்.
- பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, குரூப் ஜி-யில் முதல் இரண்டு ஆட்டங்களில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
- பிரேசில் தனது இறுதிக் குழு ஆட்டத்தில் கேமரூனிடம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஜி குழுவில் முதல் இடத்தைப் பெற சுவிட்சர்லாந்தை வெளியேற்றியது.
பிரேசில் எப்படி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது?
தென் கொரியாவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் (ரவுண்ட் ஆஃப் 16) பிரேசில் அணியின் வினிசியஸ் ஜூனியர், நெய்மர், ரிச்சர்லிசன் மற்றும் லூகாஸ் பக்வெட்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து மிரட்டினார். இறுதியில், பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரேசில் காலிறுதியில் எந்த அணியை எதிர்கொள்கிறது?
- கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட குரோஷியா, அதன் நேற்றைய நாக்-அவுட் போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
தற்போது பிரேசில் அணி காலிறுதியில் குரோஷியாவை வருகிற வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
அரையிறுதியில் பிரேசிலின் சாத்தியமான எதிரணி யார்?
- பிரேசில் அரையிறுதிக்கு முன்னேறினால், அதன் தென் அமெரிக்க பரம போட்டியாளர்களான அர்ஜென்டினா அல்லது நெதர்லாந்தை எதிர்கொள்ளலாம்.
இறுதிப் போட்டியில் பிரேசில் யாரை எதிர்கொள்ளும்?
- பிரேசில் இறுதிப் போட்டி வரை சென்றால், 2018 சாம்பியனான பிரான்ஸ் அல்லது 2016 யூரோ கோப்பை வெற்றியாளரான போர்ச்சுகலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.