Iran vs USA Wales vs England enter knockout round Tamil News: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – வேல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில் 50வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, 51-வது நிமிடத்தில் பில் போடன் தனது அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
அடுத்தடுத்த கோல்களை இங்கிலாந்து அணியினர் உதைத்த நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தனர். அவர்களை மேலும் மூழ்கடிக்கச் செய்ய மார்கஸ் ராஷ்போர்டு தனது இரண்டாவது கோலை அடித்து மிரட்டினார். இந்த அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் பி பிரிவில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது.
ஈரானை சாய்த்த அமெரிக்கா</strong>
நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – ஈரான் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில், பந்தை வலைக்குள் தள்ள இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இப்படியான சூழலில் ஆட்டத்தின் முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனால் அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் போட்டியை சமன் செய்ய ஈரான் வீரர்களின் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆட்டத்தின் முடிவு நேரம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil