FIFA World Cup 2022 Tamil News: 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையை போட்டிகளைக் காண கால்பந்து ரசிகர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். இதேபோல், கால்பந்து தொடர்பாக செய்திகளை சேகரிக்க வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பலரும் கத்தாரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஹேண்ட்பேக்கை பறிகொடுத்த பெண் நிருபர்… கத்தார் போலீஸ் பதிலால் அதிர்ச்சி
இந்நிலையில், இந்த உலகக் கோப்பையில் நேரலை நிகழ்ச்சியின் போது, அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் டொமினிக் மெட்ஜெர் என்பவரின் ஹேண்ட் பேக் திருடு போய் உள்ளது. இது தொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அப்போது கத்தார் போலீசார் அளித்த பதில் தன்னை வியக்க வைத்ததாக டொமினிக் மெட்ஜெர் தெரிவித்துள்ளார்.
திருட்டு குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு மெட்ஜெர் தெரிவித்த பிறகு, அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால், ‘திருடனை கண்டுபிடித்தவுடன் எந்த மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று அவரே தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட மெட்ஜெர் திகைத்து போயுள்ளார். ‘தனது தொலைந்து போன பொருட்களை மட்டும் மீட்டு கொடுத்தால் போதும்’ என்று கூறியிருக்கிறார். அவரது கூற்றுப்படி, ஹேண்ட் பேக்கில் இருந்து பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலானது.
“ஒருவருக்குத் தேவையான பொருட்கள், பணப்பை, எங்கள் ஹோட்டல் அறையின் சாவிகள் மற்றும் சில நாப்கின்களுடன் எனது சிறிய பையை என்னுடம் வைத்திருந்தேன். நான் கூட்டத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ பை ஜிப்பரைத் திறந்து என் பணப்பையை எடுத்தார்கள்.
அந்த நேரத்தில் நான் உணரவில்லை, நீங்கள் நேரலையில் இசையமைப்புடனும், உங்களைச் சுற்றிக் கூட்டத்துடனும் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் நீங்கள் என்னுடன் பேசுவதில் கவனம் செலுத்தினேன். அதனால் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. எனது நேரலையை முடித்த பிறகு, தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக எனது பணப்பையை எடுத்துச் செல்ல விரும்பினேன். பின்னர் அது என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன்.” என்று மெட்ஜெர் கூறியுள்ளார்.
கத்தார் உலகக் கோப்பையில் செய்தியாளர்கள் இப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன்பு, டேனிஷ் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் நேரடிலை தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டபோது கத்தார் அதிகாரிகளால் மிரட்டப்பட்டார்.
La journaliste argentine Dominique Metzger a été volée en direct alors qu'elle faisait un reportage au Qatar sur la Coupe du monde. Une partie de son argent et ses papiers ont été volés. pic.twitter.com/btfcFOnhC1
— Claire (@Langoula1Claire) November 21, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil