Cristiano Ronaldo has denied the reports of him joining Saudi Arabia club Al Nassr after the FIFA World Cup Tamil News: 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் -அவுட் சுற்றில் போர்ச்சுக்கல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.
சுவிட்சர்லாந்து தரப்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார். இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Ronaldo was the focus of prematch buzz, photographers during the anthem, his replacement’s goal celebration and Portugal fans at the end of a landmark knockout win—which, notably, was secured without him. @brianstraus on a team equipped to move forwardhttps://t.co/LhApcOZvyO pic.twitter.com/3WFuOFgMBM
— SI Soccer (@si_soccer) December 7, 2022
சவுதி கிளப் அணியில் இணைந்தது பற்றி ரொனால்டோ மறுப்பு
இந்நிலையில், போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (37) சவுதி அரேபியா கிளப் அணியான அல் நாசரில் இணைந்ததாக வெளியான தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில், ரொனால்டோ இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதன்பிறகு, கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ களமாடிய விளையாடி வரும் நிலையில், அவரை தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை அல் நாசர் கிளப் அணி அள்ளிக்கொடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்தது என்றும் கூறப்பட்டது.
இருப்பினும், ரொனால்டோ சவுதி கிளப் அணியின் அழைப்பை ஏற்பாரா? என்ற கேள்வியும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் தான், ரொனால்டோ அந்த கிளப்பில் அணியில் இணைந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து - போர்ச்சுகல் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, "இல்லை, அது உண்மையல்ல - உண்மையல்ல" என்று கூறினார்.
Cristiano Ronaldo on links of Al Nassr deal done: “No, that’s not true — not true”, he said after the game. 🚨🇵🇹🇸🇦 #Qatar2022
Al Nassr proposal, on the table — but no green light from Ronaldo as of now. pic.twitter.com/y2duCzmZtA— Fabrizio Romano (@FabrizioRomano) December 6, 2022
ரொனால்டோவை போர்ச்சுகல் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் நேற்றை சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் பெஞ்சில் அமர வைத்தார். போர்ச்சுகல் அணி அதன் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.