scorecardresearch

விமர்சிக்கப்பட்ட கால்பந்து வீரர்: நாட்டையே கண் கலங்க வைத்த சிறுவனின் கடிதம்!

child’s heart breaking letter to marcus rashford Tamil News: பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ரஷ்போர்ட்டை பலர் கடுமையாக விமரிசித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சிறுவன் எழுதிய கடிதம் இங்கிலாந்து நாட்டையே கண் கலங்க வைத்துள்ளது.

Sports news in tamil: child’s heart breaking letter to marcus rashford

Sports news in tamil: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வந்த யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் சம நிலையில் முடியவே பெனால்டி – ஷூட் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில், இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதிப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்த தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட வீரர்களில் மூவர் கருப்பினத்தவர்கள். எனவே, அவர்களையும் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்.பி.இ. பட்டம் பெற்ற மார்கஸ் ரஷ்போர்ட்டை அதிகமாக விமர்ச்சித்தும், பொது வெளியில் கடுமையான சொற்களை பயன்படுத்தியும் வறுத்தமடைய செய்துள்ளனர்.

இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தவிர, பல மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்து பலர் மனதில் ஹீரோவாக வலம் வரும் மார்கஸ் ரஷ்போர்ட்க்கு ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவாக கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில், டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற 9 வயதுடைய சிறுவன், தான் ஹீரோவாக நினைக்கும் மார்கஸ் ரஷ்போர்ட்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பலரையும் நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கடிதத்தை நேரலையில் படித்த பிரபல பத்திரிக்கையாளர் நேரலையிலே கண் கலங்கியுள்ளார்.

டெக்ஸ்டெர் ரொஷியர் சிறுவன் அந்த கடிதத்தில் எழுதியிருப்பது பின்வருமாறு:

“டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள். நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படைய செய்துள்ளீர்கள். உங்களை எண்ணி பெருமையடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள். நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான்” என்று அந்த எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண்கலங்கியதுடன், ‘இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம்’ என சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அதோடு, இந்த 9 வயது சிறுவன் எழுதிய கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் ‘சுசண்ணா ரெய்டு’ தனது கண்ணீரை அடக்க முடியாமல் நேரலையிலே கரைந்துள்ளார். அப்போது, அவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பரும் கண்கலங்கியுள்ளார். இந்த சம்பவம் இரு ஊடகவியலாளரர்களை மட்டுமல்லாது நாட்டையே கண் கலங்க வைத்துள்ளது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Football news download Indian Express Tamil App.

Web Title: Sports news in tamil childs heart breaking letter to marcus rashford