Brazil's Richarlison, center, scores the second goal of his team against Serbia during the World Cup group G soccer match between Brazil and Serbia, at the the Lusail Stadium in Lusail, Qatar on Thursday, Nov. 24, 2022. (AP Photo/Darko Vojinovic)
FIFA World Cup 2022 | How to watch FIFA World Cup 2022 Free | பிபா உலககோப்பை கால்பந்து | FIFA உலகக் கோப்பை 2022 இலவசமாக பார்ப்பது எப்படி: 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில், பலம் பொருந்திய அணிகளாக கருதப்பட்ட சில அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. குறிப்பாக, அர்ஜெண்டினா சவுதி அரேபியாவிடமும், ஜெர்மனி ஜப்பானிடமும் தோல்வியுற்றது, கால்பந்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
இப்படியாக தொடர் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் அரபு மண்ணில் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. எனவே, இந்த போட்டிகளையும், நிகழ்வுகளையும் கட்டணம் செலுத்தியாவது பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். குறிப்பாக, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கால்பந்து ரசிகர்கள் உலக கோப்பை போட்டியை காண வீதிக்கு வீதி பேனர்களை வைத்தும், வீடுகளை வாங்கியும் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழகத்திலும் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு கால்பந்து ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு நற்செய்தியை தமிழக அமைச்சர் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், கால்பந்து ரசிர்கள் பிஃபா உலக கோப்பை போட்டிகளை இனி தமிழக அரசு கேபிளில் இலவசமாக பார்க்கலாம்.
Advertisment
Advertisements
இது தொடர்பான அறிவிப்பை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. கத்தாரில் நடைபெறும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை அரசு வழங்கியிருக்கும் செட்டாப் பாக்ஸில் ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் மூலம் இலவசமாக பார்க்கலாம்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.