Top 5 Football News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கால்பந்து விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- சவுதி அரேபியாவை வீழ்த்தியும் பலன் இல்லை… வாய்ப்பை இழந்த மெக்சிகோ…
22வது உலக கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடருக்கான லீக் போட்டிகள் பரபரப்புக்கு குறைவில்லமால் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ – சவுதி அரேபியா அணிகள் மோதின.
2-வது சுற்றுக்கு முன்னேற இந்தப்போட்டியில் கட்டாயம் வெற்றி என இரு அணிகளும் களமாடிய நிலையில், ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும், சவுதி அரேபியாவை வீழ்த்திய மெக்சிகோவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கோல்கள் அடிப்படையில் அந்த அணி 2-வது சுற்று வாய்ப்பை இழந்தது.

மெக்சிகோவும், போலந்தும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், போலந்து 2 கோல் போட்டு, 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் கோல் வித்தியாசம் பூஜ்யம் ஆகும். மெக்சிகோ கோல்கள் போட்டு இருந்தது. ஆனால் 2 கோல்கள் வாங்கியது. கோல் வித்தியாசம்-1 ஆகும். இதன் காரணமாக கோல்கள் அடிப்படையில் மெக்சிகோ நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை தவற விட்டது. அந்த அணி 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது.
- கதறி அழுத ஈரான் வீரர்… கட்டியணைத்த அமெரிக்க வீரர்… குவியும் பாராட்டுகள்
அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1- 0 என்ற கணக்கில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்தவுடன், களத்தில் தோல்வியைத் தாங்க முடியாமல் ஈரான் வீரர் ரமின் ரெசியன் அழத் தொடங்கினார். அப்போது அவர் அருகில் வந்த அமெரிக்க வீரர் அண்டோனி ராபின்சன், ரமினை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
The embrace and consoling of Ramin Rezaian of @TeamMelliIran by Antonee Robinson @USMNT#FIFAWorldCupQatar2022
— Samira Mohyeddin سمیرا (@SMohyeddin) November 30, 2022
Islamic Republic lost 1 – 0 and has been eliminated from the #WorldCup pic.twitter.com/VE48PaYdYx
- நடப்பு சாம்பியனை வீழ்த்திய துனிசியா…
நேற்று எஜுகேஷனல் சிட்டி மைதானத்தில், குரூப் டி பிரிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் துனிசியா அணியும் மோதின. பிரான்ஸ் அணி ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று நிலையில், அந்த அணியின் முன்னணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட துனிசியா அணி, மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. உலகக்கோப்பை கால்பந்தில் ஐரோப்பிய அணிக்கு எதிராக துனிசியா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது துனிசியா.
- அமெரிக்கா வெற்றி… ஈரானியர் சுட்டுக்கொலை
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அமெரிக்கா
ஈரானில் ஆட்சிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கால்பந்து போட்டியில் ஈரான் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டதை, ஈரான் மக்கள் கொண்டாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
خوشحالی مردم سقز در محله کریمآباد بعد باخت تیم ایران مقابل آمریکا
— Farzad Seifikaran (@FSeifikaran) November 29, 2022
دوشنبه ۸ آذر ۱۴۰۱#مهسا_امینی #MahsaAmini pic.twitter.com/SVaGVUstxt
- உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியல்.
கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
காலிறுதிக்கு முந்தைய சுற்று டிசம்பர் 3 முதல் தொடங்கவுள்ளது. இதில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகளும், அர்ஜென்டினா – ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன. டிசம்பர் 4 அன்று பிரான்ஸ் – போலந்து அணிகளும், இங்கிலாந்து – செனகல் அணிகளும் மோதுகின்றன. டிசம்பர் 6 வரை இந்தச் சுற்று நடைபெறவுள்ள நிலையில், காலிறுதிச் சுற்று போட்டிகள் டிசம்பர் 9 முதல் தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil