Advertisment

'எந்த அவமரியாதையும் இல்லை': வீரர்களுடன் நடனம் போட்ட பிரேசில் பயிற்சியாளர் விளக்கம்

தென் கொரியாவுக்கு எதிரான வெற்றியின் பிரேசில் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் டைட் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Watch: Brazil coach Tite after dancing video with players crticised Tamil News

brazil vs south korea: Brazil coach Tite dancing video goes viral Tamil News

FIFA World Cup 2022 Brazil vs South Korea Highlights; Brazil coach Tite dancing video Tamil News: 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான நாக்-அவுட் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு தோகாவில் உள்ள ராஸ் அபு அபவுத் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பிரேசில் - தென் கொரியா அணிகள் மோதின.

Advertisment

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக விளையாடிய நிலையில், முதல் பாதியில் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வீரர்களுடன் ஆட்டம் போட்ட பிரேசில் பயிற்சியாளர் - வைரல் வீடியோ

இந்நிலையில், தென் கொரியாவுக்கு எதிரான வெற்றியின் பிரேசில் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் டைட் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

publive-image

தென் கொரியாவுக்கு ஆட்டத்தில் எதிராக ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். அதன்பிறகு, மைதானத்தை வேகமாக ஓடி வந்த அவர், வெளியே இருந்த வீரர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார். அப்போது அங்கிருந்த பயிற்சியாளர் டைட் (அடினோர் லியோனார்டோ பாச்சி) ரிச்சர்லிசன் மற்றும் வீரர்களுடன் நடனமாடி கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் டைட், ஆட்டத்திற்கு முன் தனது அணி வீரர்கள் தன்னிடம் கோல் அடித்தால் அவர்களுடன் சேர்ந்து ஆட வைப்போம் என்று கூறியதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் அவர் நடமாடியது அனைவரையும் ஈர்க்கவில்லை. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கேப்டன் ராய் கீன், பிரிட்டனின் ITV தொலைக்காட்சியில் பேசுகையில், "மக்கள் இது அவர்களின் கலாச்சாரம் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில் எதிரணியை அவமரியாதை செய்வதாக நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

'எந்த அவமரியாதையும் இல்லை': பயிற்சியாளர் டைட் விளக்கம்

இது குறித்து விளக்கமளித்த பிரேசில் பயிற்சியாளர் டைட்,"நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவமரியாதை என்று சொல்லும் தீயவர்கள் இருக்கிறார்கள். கோல் அடித்தத்தில் மகிழ்ச்சி, அணிக்கு மகிழ்ச்சி, செயல்திறனுக்கான மகிழ்ச்சியைத் தவிர வேறு எந்த விளக்கமும் இல்லை.

தென் கொரிய பயிற்சியாளர் பாலோ பென்டோவுக்கு எந்த அவமரியாதையும் இல்லை, அவரை நான் மிகவும் மதிக்கிறேன்." என்றும் அவர் கூறியுள்ளார்.

வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிபிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral Sports Viral Video Viral News Football South Korea Brazil Neymar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment