FIFA World Cup 2022 Cameroon vs Brazil Highlights - Vincent Aboubakar Tamil News: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு குரூப் ஜி பிரிவில் லுசைல் மைதானத்தில் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பிரேசில் - கமரூன் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன.
பிறகு ஆட்டத்தில் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 90+ 2வது நிமிடத்தில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் கோல் அடித்து அசத்தினார். இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த கேமரூன்… அபூபக்கருக்கு 'ரெட் கார்டு' ஏன்?
கத்தாரில் நடந்து ஃபிஃபா உலகக் கோப்பை 16-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் அணிகளில் ஒன்றாக உள்ளது பிரேசில். உலகில் பலம் வாய்ந்த கால்பந்து அணிகளுள் ஒன்றாக வலம் வரும் அந்த அணி நடப்பு சீசனில் ஒரு கோலைக்கூட விட்டுக்கொடுக்காமலும், எதிரணிக்கு கோல் அடிக்க வாய்ப்பளிக்காமலும் மிரட்டி வருகிறது. மேலும், அந்த அணி உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு எதிராகவும் தோற்றது இல்லை.
இந்நிலையில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை, 0 - 1 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வீழ்த்தி அசத்தியுள்ளது, இந்த தரமான வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை கேமரூன் அணி படைத்துள்ளது.
கேமரூன் அணி கடைசியாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் வென்றது. அப்போது சாமுவேல் எட்டோவின் அற்புத கோலால் அந்த அணி வெற்றியை ருசித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த அவர்களின் லெஜண்ட் எட்டோவை கேமரூன் வீரர்கள் ஏமாற்றவில்லை. அந்த அணியின் வின்சென்ட் அபூபக்கர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோலை அடித்து மிரட்டினார்.
ஆனால், இந்த கோலை அடித்த பூபக்கர், அடுத்த சில வினாடிகளிலேயே தனது ஜெர்ஸியை கழற்றி தனது கைகளால் சுழற்றினார். மேலும், மைதானத்தில் அரைநிர்வாண போஸ் கொடுத்தார். இதைப்பார்த்த களநடுவர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். அவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்து வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Cameroon's Vincent Aboubakar scored in the 92nd minute to beat Brazil.
He took his shirt off, got a second yellow and was sent off.
Worth it. pic.twitter.com/NuSG9tLxhh— B/R Football (@brfootball) December 2, 2022
Aboubakar scoring in the 92nd minute to beat Brazil and taking his shirt off for his second yellow for vibes 😭👏 #FIFAWorldCup pic.twitter.com/vHM8bbmbmm
— JAMODO (@JamieODoherty) December 2, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.