பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோஷியா… கண்ணீர் விட்டு கதறிய நெய்மர் – வீடியோ

குரோஷியாவிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீருடன் விடைபெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch video: Heartbroken Neymar Cries Relentlessly After Brazil's World Cup Exit Tamil News
Croatia defeated Brazil 4-2 to qualify for the semi-finals Tamil News

Croatia vs Brazil: Heartbroken Neymar Cries Relentlessly Tamil News: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.

பரபரப்புக்கு பஞ்சமில்லதாக இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால், பதற்றமும், எதிர்பார்ப்பும் அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்து மிரட்டினார். ஆனால், அவர்களின் குஷி ஆட்டம் அடுத்த நிமிடத்திலே அடங்கிப்போனது.

குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் 116-வது நிமிடத்தில் பந்தை பிரேசிலின் வலையில் தள்ளவே, போட்டி சமனில் இருந்தது. ஏற்கனவே கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டும் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை இருந்ததால், இறுதி முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டுவரப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோல் அடித்து மிரட்டியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது.

இதனால், பரபரப்பு மூழ்கியிந்த பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கோப்பைபை வெல்லும் கனவொடும், வாய்ப்போடும் இருந்த 5 முறை சாம்பியன் பிரேசில் கால்இறுதியிடன் நடையைக் காட்டியுள்ளது.

குரோஷியாவிடம் அதிர்ச்சி தோல்வி… கண்ணீருடன் விடைபெற்ற நெய்மர்

உலக கால்பந்து அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் பிரேசில் 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 என 5 முறை ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி உலகக் கோப்பை தேடலில் இருந்து வரும் நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் அந்த தேடலுக்கு முடிவு எழுதுவார் என்று ரசிகர்கள் பெருங்கனவுடன் இருந்தனர். இந்த நிலையில், காலிறுதியில் குரோஷியாவிடம் அதிர்ச்சி தோல்வி பெற்று விடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தோல்விக்குப்பிறகு, கத்தார் உலகக் கோப்பையில் தங்களுக்கு ஆதரவளித்த ஏராளமான பிரேசில் ரசிகர்களிடம் விடைபெற்றபோது மனமுடைந்த நெய்மர் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. அவரின் சக வீரர்கள் சிலரும் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அவர்களால் அவரை நிறுத்தமுடிவியவில்லை. 6வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் பிரேசிலின் கனவு தகர்க்கப்பட்டதால், நெய்மருக்கு ஆறுதல் கூறுவது கடினமாகிவிட்டது.

நெய்மர் கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டபட்ட நிலையில், அவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

குரோஷியா அணி அதன் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை காலிறுதியில் வீழ்த்திய லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற 14 ஆம் தேதி நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Football news download Indian Express Tamil App.

Web Title: Watch video heartbroken neymar cries relentlessly after brazils world cup exit tamil news

Exit mobile version