Advertisment

அரபிக் கடலில் மெஸ்ஸியின் 100 அடி கட் அவுட்: கேரள ரசிகர்கள் ஸ்கூபா டைவ்வில் வைத்த வீடியோ

கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் ஆழ்கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை எப்படி வைத்தனர் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Watch video: Kerala fans install Lionel Messi’s cutout in Arabian Sea Tamil News

Messi's life-size cutout installed under 100 feet deep in the Arabian Sea. (Screengrab/Twitter)

Kerala fans - Lionel Messi cutout 100 feet Tamil News: அரபு நாடான கத்தாரில் நடைபெற்று முடிந்த 22வது உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய அர்ஜென்டினா. கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அணி வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்த வெற்றியைக் உற்சாமாகக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
publive-image

ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் அவர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் ஸ்கூபா டைவ் அடித்து மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர். அந்த வீடியோ அப்போது இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் ஆழ்கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை எப்படி வைத்தனர் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை முகமது ஸ்வாதிக் என்ற ரசிகர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதேபோல், அந்த வீடியோவை லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, முகமது ஸ்வாதிக் 'உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மெஸ்சியின் கட்அவுட்டை கடலில் 100 அடி ஆழத்தில் வைப்பேன் என்று கூறியிருந்தார். அதேபோல், கடந்த செவ்வாய்கிழமை குரோஷியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, முகமது ஸ்வாதிக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Video Kerala Sports Football Lionel Messi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment