சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனியும் நானும் 'ஷோலே' ஜெய், விரு மாதிரி - ரெய்னா

தோனி தனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் தனக்கு உதவியுள்ளார்

தோனி தனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் தனக்கு உதவியுள்ளார்

author-image
WebDesk
New Update
சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனியும் நானும் 'ஷோலே' ஜெய், விரு மாதிரி - ரெய்னா

நாங்கள் தெற்கே செல்லும்போது, ​​எங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது

எம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவிக்க ரசிகர்கள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

Advertisment

சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” உங்களுடன் இணைந்து விளையாடின நேரங்கள் மிகவும் அழகானவை. பெருமிதத்துடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவை நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டு தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், கிரிக்பஸில் பிரபலமான கிரிக்கெட் ஷோ தொகுப்பாளர் ஹர்ஷா போக்லேவுடன் பேசிய ரெய்னா, சி.எஸ்.கே மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு ஒரு வீரராக தான் வளர உதவியதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

Advertisment
Advertisements

ஃபீல்டர்களே ரசிகர்கள்; ரசிகர்களே ஃபீல்டர்ஸ் – சிபிஎல் பரிதாபங்கள் (வீடியோ)

"நான் (சிஎஸ்கே)அமைப்பை விரும்புகிறேன், அவர்கள் வீரர்களை நன்றாக கவனித்துக்கொள்வதில் தொழில்முறை தெரிந்தவர்கள்," என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தோனியும் நானும் 2003-2004 ஆம் ஆண்டு எங்கள் ஆரம்ப கால முகாம்களிலிருந்து ஒன்றாக இருந்தோம். நாங்கள் பெங்களூர் முகாம்களில் பயிற்சி பெற்ற போது, ஒருவருக்கொருவர் நன்கு அறிவோம். அவர் விளையாட்டையும் ஆளுமையையும் மாற்றக்கூடிய நபர் என்று நான் அப்போதே உணர்ந்தேன். தோனி எனக்கு உதவியது மட்டுமின்றி, கடினமான காலங்களில் என் குடும்பத்திற்கும் ஆதரவாக இருந்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வேலூர் சி.எம்.சி மருத்துவ நிபுணருடன் உரையாடல்

விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்று பெயர் பெற்ற ரெய்னா, தோனி தனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் தனக்கு உதவியுள்ளார் என்றும் கூறினார். "2007 ஆம் ஆண்டில் எனக்கு ஆபரேஷன் நடந்த ஒரு கடினமான நேரத்தில் அவர் எனக்கு உதவினார். ஒன்றரை வருடம் என்னை ஒரு கடினமான மனிதனாக்கியது. அந்தக் காலத்திலும் தோனி எனக்கு வழிகாட்டினார். ”

‘தோனி கற்றுக் கொடுத்த 3 வாழ்க்கைப் பாடங்கள்’ – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

உத்தரபிரதேசத்தின் மொராத்நகரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா, சி.எஸ்.கே ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் எப்போதும் கடன்பட்டிருப்பதாகவும், 'சின்ன தல' என்று அழைக்கப்படுவதற்கு தான் கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

“இது தூய அன்பும், ஆசீர்வாதமும் என்று சொல்லலாம். இது ஷோலே படத்தின் ஜெய் மற்றும் விரு போன்றது. அவர்கள் எங்கள் விளையாட்டை மிகவும் ரசிக்கிறார்கள், எங்களை நேசிக்கிறார்கள். நாங்கள் தெற்கே செல்லும்போது, ​​எங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது, ஆனால் அவர்கள் எங்கள் கிரிக்கெட்டை அனுபவிக்கிறார்கள். இது ரசிகர்களால் மட்டுமே. அவர்கள் எங்களை நன்றாக நடத்துகிறார்கள், அவர்கள் எங்களை வெளிப்படுத்த நிறைய சுதந்திரத்தை தருகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Dhoni Suresh Raina

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: