வெங்கடகிருஷ்ண பி – Venkata Krishna B
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு, நிற்கவே முடியாத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ஸ்டேடியத்திற்கு வெளியே நடைபாதையிலும், மெரினா கடற்கரையிலும் வழக்கமாக வசிக்கும் ஒரு சில பெண்கள், தினமும் தங்களது குழந்தைகளின் உணவாவுக்காக போராடும் பெண்கள், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 13-16 வயதுடைய இளம் பெண்கள், பகுதிநேர வேலையைச் சார்ந்துள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் போன்றோர்கள் தான் ரூ. 2,000 மதிப்பிலான ஐபிஎல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் பட்டாபிராமன் கேட் வெளியே காத்திருந்த 700-800 பெண்களின் கூட்டத்தில் இருந்தவர்கள்.
சில மீட்டர்கள் முன்னால் இருக்கும் விக்டோரியா ஹாஸ்டல் சாலையிலும் இதே காட்சி தான் இருந்தது. அங்கு அதிகாலை 2.30 மணிக்கே இரு முனைகளிலிருந்தும் நுழைவாயிலை போலீசார் தடுத்து நிறுத்தினர். 1,500 ரூபாய்க்கு கிடைக்கும் டிக்கெட்டுகளுக்கு வரிசையில் நிற்க விரும்பும் எவருக்கும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. வரிசையாக நிற்கும் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்களாகவோ அல்லது பிழைப்புக்காக எதோவொரு வேலைகளைச் செய்பவர்களாகவோ இருந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசி லீக் ஆட்டத்தில் தங்களுக்குப் பிடித்த ‘தல’ எம்எஸ் தோனியைப் பார்ப்பதற்காக தலா இரண்டு டிக்கெட்டுகளை வாங்க அவர்கள் கால்கடுக்க காத்திருந்தார்கள் என்பதைத் தவிர, அவர்களில் பெரும்பாலோரை இணைக்கும் ஒரு புள்ளி இருந்தது.
இது தொடர்பாக அவர்களிடம் கேட்டக்கப்பட்ட போது, அவர்களில் பெரும்பாலோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் விளையாடுகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் இருந்தது. இருப்பினும், அவர்கள் கூறியதில் இருந்து ஒரு திடுக்கிடும் ஒளிந்திருந்தது. “கியூவில் நின்று டிக்கெட் வாங்க எங்களுக்கு 800 ரூபாய் வழங்கப்படுகிறது. நாங்கள் அவற்றை ஒரு நபரிடம் ஒப்படைப்போம். அந்த நபர்கள் அவற்றை கள்ளச்சந்தையில் தலா 5,000 ரூபாய்க்கு விற்பார்கள். நான் வரிசையில் நிற்கும் 4வது போட்டி இது. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 800 ரூபாய் கிடைக்கும்” என்று ஒரு இளைஞர் கூறுகிறார்.
காலை 7 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தொடங்கிய கவுன்ட்டர் டிக்கெட் விற்பனைக்கு இரவு 11.30 மணிக்கே (வியாழன்) வரிசையில் சேர்ந்ததால், தாமதமாக வருபவர்களுக்கு விற்க இந்த சிறார்கள் டிக்கெட்டுகளை வாங்குவதை அறிய முடிந்தது.

“கள்ளச் சந்தையில், இந்த டிக்கெட்டுகளுக்கு (சி, டி, இ லோயர் ஸ்டாண்ட்) 5,000 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். அதனால், ஒரு இரவு தூக்கத்தை இழந்தாலும், என் பாக்கெட்டில் இருந்து 3,000 ரூபாய் செலவழித்தாலும், 7,000 ரூபாய் திரும்பப் பெற முடியும். மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு, இந்த டிக்கெட்டுகள் ரூ.8,000க்கு விற்கப்பட்டன. இது கடைசி போட்டியாக இருப்பதால், அதேபோன்று தேவை அதிகம் இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன், ”என்று அவர் கூறுகிறார். அவரது நண்பர் காவல்துறையினரின் எதிர்ப்பைத் தடுக்கிறார்கள்.
பேரார்வம் மீது ஈட்டப்படும் லாபம்
பெண்கள் கவுண்டரிலும் இதே கதை தான். அவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதுப் பெண்களாக காணப்பட்டனர். அவர்கள் பொதுவாக மாநகராட்சிக்கு பகுதி நேர அடிப்படையில் துப்புரவுப் பணிகளைச் செய்பவர்களாகவும் அல்லது கிடைக்கும் வேலைகளை செய்பவர்களாகவும் இருந்தனர். ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கு அனைத்து விதமான மக்களிடமிருந்தும் முன்னெப்போதும் இல்லாத கிராக்கி இருப்பதால், இந்த ஏப்ரல்-மே மாதங்களில் வரிசையில் நிற்பதற்கு சம்பளம் வாங்குவது அவர்களின் வேலையாகிவிட்டது. சிலர் புகைப்படம் எடுக்கப்படுவதை விருப்பவில்லை. அதனால், போலீசார் தங்களுக்கு குடைச்சல் கொடுக்க நேரிடும் என அச்சம் தெரிவித்தார்கள்.
இந்தக் கள்ளச் சந்தை மோசடியைப் பற்றி போலீஸாருக்குத் தெரியாமல் இல்லை, ஆனால் அவர்களால் கூட அதைத் தடுக்க முடியவில்லை. இந்த சீசனில் போலீசார் சிலரைக் கைது செய்துள்ளனர். “யார் விளையாடுகிறார்கள் என்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. நிற்க எங்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. நாங்கள் அவற்றை வாங்கியவுடன், அவர்களில் ஒருவர் அதை எங்களிடமிருந்து வாங்கிக்கொள்வார்”என்று ஒரு நடுத்தர வயது பெண் கூறுகிறார்.
சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறும் நாட்களில், இந்த டிக்கெட்டுகள் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த டிக்கெட்டுகள் சமூக ஊடக தளங்களில் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகின்றன. சமூக வலைதளங்களில் டிக்கெட் வாங்க பலர் தயங்கும் நிலையில், மைதானத்தை ஒட்டிய பெல்ஸ் சாலையில் உள்ள முகமது அப்துல்லா 2வது தெரு விற்பனை மையமாக மாறியுள்ளது. கடந்த புதன்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சூப்பர் கிங்ஸின் ஹோம் மேட்ச்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, 3-4 பேர் ஐ, ஜே, கே ஸ்டாண்டுகளின் ரூ., 2,000 மற்றும் ரூ.2,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை ரூ. 8,000 மற்றும் அதற்கு மேல் விற்றதைக் காண முடிந்தது.
இந்த சீசன் முழுவதும் இதுவரை, எண்ணற்ற ரசிகர்கள், பல மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து பயணம் செய்து, கவுண்டரில் இருந்து உண்மையான கட்டணத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தனர். ஆனால், அவர்களில் பலர் ஏமாற்றத்துடன் தான் வீடு திரும்பினர். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடமும் அவர்கள் தங்களின் ஏமாற்றத்தையம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலையும் இதேபோன்று தான் நிகழ்ந்தது. விக்டோரியா ஹால் ரோட்டில், சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது அவரது கடைசி சீசன் என்று கருதி, அவரை நேரில் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் திருச்சியில் இருந்து வந்த 5-6 கல்லூரி மாணவர்கள் போலீசாரல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் போட்டிருக்கும் தடுப்பு அருகே நிருபர்களை செய்தி சேகரிக்கவும், புகைப்படங்களை கிளிக் செய்யவும் கூட அனுமதிக்கவில்லை. ஏனெனில், கடந்த வாரத்தில், ஒரு தமிழ் செய்தி சேனல், கவுன்டரில் இருந்து போலீசார் டிக்கெட் வாங்கும் காட்சிகளை ஒளிபரப்பினர்.
இந்த சீசன் முழுவதும், வரிசையை உடைத்து, கவுன்டரில் உள்ள டிக்கெட்டுகளை, போலீசார் எடுத்து, கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த புதன்கிழமை போட்டிக்கு முன்னதாக, மைதானத்திற்கு வெளியே காவல்பணியில் நிறுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவர், ‘டிக்கெட் வேண்டுமா’ என்று ரசிகர்களிடம் விசாரிப்பதைக் காண முடிந்தது. சில நிமிடங்களில், கோயம்புத்தூரில் இருந்து வந்த ஒரு தம்பதிக்கு, அவர் 1,500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு டிக்கெட்டுகளை, 4,000 ரூபாய்க்கு விற்றார்.
குறைந்த போன தீவிர ரசிகர்கள்
கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை களைகட்டி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தோனியைப் பார்க்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யுமாறு அணி நிர்வாகத்திற்கு ஏற்கனவே கேட்டுக் கொண்டனர். “அவர்கள் இந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை செய்தால், நீங்கள் அதை கள்ளச் சந்தையில் வாங்க முடியாது.
ஏனென்றால் ஒவ்வொரு நபரும் இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்வது கறுப்புச் சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு மட்டுமே உதவுகிறது. இந்த சீசனில், ஐபிஎல் டிக்கெட்டுகள் எங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதை நாங்கள் பார்த்தோம். இப்போது நாங்கள் முழுவதுமாக ஆதரவளிக்கும் அணியே எங்களை வீழ்த்தியது போல் தெரிகிறது.” என்று கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கு போட்டிகளை காண வரும் தினேஷ் குமார் கூறுகிறார்.
Scene outside Chepauk late on Thursday night/Friday early morning. pic.twitter.com/JuOz6Ac9LQ
— Venkata Krishna B (@venkatatweets) May 12, 2023
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 750 ரசிகர்களை ஏற்றிச் சென்ற விசில் போடு எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை இரண்டு போட்டிகளுக்கு ஏற்றிக்கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் வாங்க தனி கவுன்டரை அறிமுகப்படுத்தபட்டது.
ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளையும் விற்பதைப் பொறுத்தவரை, ‘அது எந்த நேரத்திலும் விற்றுத் தீர்ந்துவிடும், எனவே அவர்கள் கவுண்டர் விற்பனையைத் தொடர வேண்டியிருந்தது என்று கூறினார். “கள்ளச் சந்தையில் கவுண்டரில் அவர்கள் எடுக்கும் டிக்கெட்டுகளை விற்பவர்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களால் அதைத் தடுக்க முடியவில்லை. யாரும் வரிசையில் நிற்பதை எங்களால் தடுக்க முடியாது, அவர்கள் பணம் செலுத்தும் வரை, டிக்கெட்டை அவர்களிடம் ஒப்படைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கூட நாங்கள் கூறிவிட்டோம். இதனால் ஒருவர் அவற்றை மொத்தமாக வாங்கக்கூடாது, ”என்று அந்த அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil