Forbes List 2020 Roger Federer replaces Lionel Messi as the world’s highest-paid athlete : வெள்ளிக்கிழமை போர்ப்ஸ் பத்திரிக்கை உலக அரங்கில் அதிக அளவு சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. முதன்முறையாக இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னிலை பெற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்களின் சம்பளத்தில் குறைப்பு செய்துள்ளனர். இதனால் இந்த டென்னிஸ் வீரர் முதல்நிலை அடைந்துள்ளார்.
நூறுபேர் கொண்டுள்ள இந்தப் பட்டியலில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா இருபத்தி ஒன்பதாவது இடத்தை கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து டென்னிஸ் வீரர் செரினா வில்லியம்ஸ் இடம்பிடித்துள்ளார். நூறு பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்த இரண்டு பெண்கள் மட்டுமே அதிக அளவு சம்பளம் வாங்கும் வீராங்கனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் அதிக அளவில் கூடைப்பந்தாட்ட வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு வீரர்களும், டென்னிஸ், குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ரோஜர் ஃபெடரர் 106.3 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கின்றார். இரண்டாவது இடத்தில் க்றிஸ்டினோ ரொனால்டோ 105 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார். அவரைத் தொடர்ந்து, இத்தனை நாட்களாக முன்னிலை வகித்த, கால்பந்து விளையாட்டு வீரர் லியோனால் மெஸ்ஸி 104 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார். நெய்மர் 4வது இடத்திலும், அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் லெ ப்ரோன் ஜேம்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“