Former Captain Of Wheelchair Cricket Team Works As A Labourer Amid Pandemic : மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் ராஜேந்திர சிங் தாமி. கொரோனா ஊரடங்கால் பலரும் வேலை ஏதுமின்றி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் முடக்குவாதம் ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளியாக இருக்கும் ராஜேந்திரசிங் தாமி தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கூலி வேலை செய்து வருகிறார்.
திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய செலவிற்காக வேலைகளை செய்து வருகிறார் ராஜேந்திர சிங் தாமி. என்னுடைய தகுதிக்கு ஏற்ற வேலையை தாருங்கள் என்று நான் அரசிடம் முறையிட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருப்பதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிதோராகர் பகுதியின் மெஜிஸ்திரேட் விஜயகுமார், ராஜேந்திர சிங்கிற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு அம்மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் நிலை அறிந்து தற்போது சோனு சூட் அவருக்கு உதவியதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
விளையாட்டுத்துறையில் இருக்கும் பாரபட்சம் இது போன்ற நிலைகளை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : பினராயி விஜயனை அமைதியாக்கிய”அந்த” கேள்வி… பதில் சொல்ல தகுதியற்றது என சீற்றம்