இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் புகழ்மிக்க வெற்றிக்கு காரணமான அஸ்வினுக்கு, முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், அனைவரும் வியக்கும் வகையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு காரணமான அஸ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அஸ்வின் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 36 வயதான அஸ்வின் சிறாப்பாக விளையாடி இந்தியா வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்வதற்கு காரணமாக அமைந்தார்.
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில், “ஒரு விஞ்ஞானிதான் இதைச் செய்தார். எப்படியோ வெற்றி கிடைத்தது. இது அஸ்வினின் அற்புதமான இன்னிங்ஸ். ஷ்ரேயாஸ் ஐயருடன் அற்புதமான பார்ட்னர்ஷிப்” என்று பதிவிட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் - அஸ்வின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
வெள்ளைப் பந்து ஸ்பெஷலிஸ்ட்டான சூர்யகுமார் யாதவ், 100 சதவீதம் அழுத்தத்த்தில் இருந்தபோது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று பார்ட்டியுள்ளார்.
விளையாட்டு புள்ளியியல் நிபுணர் மோகன்தாஸ் மேனன் ட்விட்டரில், “ஆர். அஸ்வின் 4வது இன்னிங்ஸில்
ஜனவரி 2021-ல் சிட்னியில் 128 பந்துகளில் 39* ரன் எடுத்தது - அந்த டெஸ்டைக் காப்பாற்றியது
2022 டிசம்பரில் மிர்பூரில் 62 பந்துகளில் 42* ரன் எடுத்தடு இந்த டெஸ்டில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் வர்ணனையாளருமான வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அஸ்வின், ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் ஆகியோரின் 42, 29 மற்றும் 34 ரன்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், இவை மிகவும் உயர்வானவை. இந்தியா தொடரை வென்றதற்கு வாழ்த்துகள் வங்கதேசமும் நன்றாக விளையாடியது. இந்தியாவுக்கு சரியான பயத்தை அளித்தது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ட்விட்டரில், “இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ரன்னுக்கு மதிப்பு இருக்கிறது” என்று அஸ்வினைக் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.