முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவருக்கான வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மும்பையில் உள்ள ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக யாரைத் தேர்வு செய்வது என விரிவாக விவாதிக்கப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன் பிரிஜேஷ் படேலை முன்மொழிந்தார். ஆனால், அவரை பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இறுதியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைத் பி.சி.சி.ஐ. தலைவராக்குவது என முடிவுசெய்யப்பட்டது.
அதேசமயம், கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுவார். அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும், அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜாயேஷ் ஜார்ஜ் இணைச் செயலாளராகவும் தேர்வாகின்றனர்.
நிர்வாகிகள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். யார் யாருக்கு எந்தப் பதவி என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வருகிற 23ம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொள்வார்கள்.
13, 2019So Sourav Dada Ganguly makes yet another spectacular comeback to take over as the Board President.Unless the match turns yet again which seems unlikely
— Gautam Bhattacharya (@gbsaltlake)
So Sourav Dada Ganguly makes yet another spectacular comeback to take over as the Board President.Unless the match turns yet again which seems unlikely
— Gautam Bhattacharya (@gbsaltlake) October 13, 2019
“கங்குலி இப்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பாளராக உள்ளார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார். அனைத்து பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் இது இன்று முடிவு செய்யப்பட்டது" என்று கங்குலிக்கு நெருக்கமான வட்டாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திடம் கூறியது.
47 வயதான சவுரவ் கங்குலி கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ளார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் கங்குலி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமான் கெய்க்வாட், பி.சி.சி.ஐ.யின் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட உயர் கவுன்சிலின் ஆண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாந்தா ரங்கசாமி பெண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.