கிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Advertisment
கர்நாடக கிரிக்கெட் லீக் போட்டியில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, 4 வீரர்கள் உள்பட 8 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
சிவமோகா அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யுமிதுனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பெட்டிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், அவர் கைது செய்யபடாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க – தர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரசிகர்களை கவர்ந்ததா ?
இதுகுறித்து காவல்துறை குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், "ஆம். மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மிதுனுக்கு நாங்கள் சம்மன் அனுப்பியுள்ளோம். அவர் இந்திய சர்வதேச அணிக்காக விளையாடி இருப்பதால், பிசிசிஐயிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கடந்த KPL சீசனில் விளையாடியது குறித்து அவரிடம் விசாரிக்க சில கேள்விகளையும் தயார் செய்து வைத்திருக்கிறோம்" என்றார்.
மேலும், சூதாட்டம் குறித்து சர்வதேச இந்திய அணியில் விளையாடிய வீரர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பது இதுவே முதல் முறையாகும்.
பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் மகளான ரேயானின் கணவர் தான் அபிமன்யூ மிதுன். இவர் இந்திய அணி சார்பில் 9 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.