legendary spinner Bishan Singh Bedi passes away: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி நீண்ட காலமாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்.23) தனது 77ஆவது வயதில் காலமானார்.
பிஷன் சிங் பேடி ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார், இவர் 22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
பேடி 1967 முதல் 1979 வரை சுறுசுறுப்பான வீரராக இருந்தார். இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பேடி, எரபள்ளி பிரசன்னா, பி.எஸ்.சந்திரசேகர் மற்றும் எஸ். வெங்கடராகவன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் ஆவார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில், பேடி முதன்மையாக டெல்லி அணிக்காக விளையாடினார். ஓய்வுக்குப் பிறகு, அவர் பல வளரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றினார்.
பின்னாள்களில் ஜென்டில்மேன் கேமில் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிரிக்கெட்டில் எப்போதும் வெளிப்படையாக பேசுபவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“