Advertisment

நிதி முறைகேடு வழக்கு... சம்மன் அனுப்பிய இ.டி: சிக்கலில் முன்னாள் இந்திய கேப்டன்

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.20 கோடி நிதியை முறைகேடாக கையாண்டது தொடர்பாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் மீது தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு மொத்தம் மூன்று முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Former indian cricket captain Mohammed Azharuddin summoned by Enforcement Directorate in money laundering case Tamil News

அசாருதீன் 2019 இல் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் அவரது பதவிக்காலம், 2023 இல் நீதிபதி (ஓய்வு) எல் நாகேஸ்வர ராவ் நியமனத்துடன் முடிவடைந்தது.

இந்திய அணிக்காக கடந்த 1984-ல் அறிமுகமானவர் முகமது அசாருதீன். ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் 99 டெஸ்ட் மற்றும் 334 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 15593 ரன்கள் குவித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். அவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ex-cricket captain Mohammed Azharuddin summoned by ED in money laundering case

இதன்பிறகு, அரசியல் களத்தில் குதித்த அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்.சி.ஏ.) தலைவராக இருந்தபோது நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை இன்று வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் தான் ஆஜராக அவகாசம் கோரியுள்p  க கிfccdfc ayரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.20 கோடி நிதியை முறைகேடாக கையாண்டது தொடர்பாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு மொத்தம் மூன்று முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதையடுத்து இந்த விவகாரத்தில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்தச் சூழலில் தான், ஐதராபாத் கிரிக்கெட் சங்க பண மோசடி விவகாரத்தில் முதல் முறையாக முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

அசாருதீன் 2019 இல் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் அவரது பதவிக்காலம், 2023 இல் நீதிபதி (ஓய்வு) எல் நாகேஸ்வர ராவ் நியமனத்துடன் முடிவடைந்தது. ஐதராபாத் கிரிக்கெட் சங்க அபெக்ஸ் கவுன்சிலில் உள்ள உட்பூசல் மற்றும் பல நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டது.

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இரண்டாவது முறையாக நிற்கும் போது, ​​ஆளும் குழுவில் ஆழமாக வேரூன்றிய ஊழலை ஒழிப்பதாக அசாருதீன் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Indian Cricket Team Indian Cricket Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment