Advertisment

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி கடுமையாக இருக்கும்: முகம்மது அசாரூதீன்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் வேட்பாளருமான முகம்மது அசாரூதீன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ICC Mens Cricket World Cup 2023 India Vs Australia Final Match

முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் வேட்பாளருமான முகம்மது அசாரூதீன்

worldcup | Mohammed Azharuddin | India Vs Australia Final Match | இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தெலங்கானா ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி கடுமையாக இருக்கும் என்றார்.

Advertisment



இது குறித்து அவர் பேசுகையில், “போட்டி கடுமையாக இருக்கும். இது மிகவும் எளிதாக இருக்கப் போவதில்லை. இது இரு அணிகளுக்கும் கடினமாக இருக்கும். இந்தியா விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவுக்கு கடினமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் எடுத்துள்ளது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்துவருகிறது. 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment