ஐ.பி.எல் கிரிக்கெட் 2025: தோனி எதிர்காலம் எப்படி? டிவில்லியர்ஸ் - கும்ளே மாறுபட்ட கருத்து!

தமிழ்நாட்டில் ஹீரோ வழிபாடு வழக்கம். அதனால், தோனி இங்கு கடவுளாக போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhoni Kumle and ABD

ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான பவர்ப்ளே நிகழ்ச்சியில் டாடா ஐபிஎல் தொடரின் முன்னாள் நட்சத்திரங்கள் ஏ.பி.டிவில்லியர்ஸ், அனில் கும்ப்ளே, ஷேன் வாட்சன், அஜய் ஜடேஜா, ஆகாஷ் சோப்ரா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாரம்பரியத்தையும், ருதுராஜ் கெய்க்வாட் அதை எவ்வாறு முன்னோக்கி எடுத்து செல்வார் என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

முன்னாள் கேப்டன் தோனியின் சென்னை பிணைப்பு பற்றி...

ஆகாஷ் சோப்ரா: தோனி மற்றும் சென்னை ரசிகர்களின் பிணைப்பு உண்மையிலேயே அற்புதமானது. ஒரு வெளிநகர வீரரை சொந்த நகரின் மகனாக ஏற்றுக்கொள்வது அரிதான விஷயம்.

அஜய் ஜடேஜா: 2008-ல் ஐபிஎல் தொடங்கியபோது, ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஐகான் இருந்தார். யுவராஜ் பஞ்சாபுக்கு, சேவாக் டெல்லிக்கு. ஆனால் தோனி ஒருநாள் சென்னையின் அபிமானக் குழந்தையாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Advertisment
Advertisements

அனில் கும்ப்ளே: தமிழ்நாட்டில் ஹீரோ வழிபாடு வழக்கம். அதனால், தோனி இங்கு கடவுளாக போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை.”

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை மாற்றம் குறித்து...

ஷேன் வாட்சன்: 42 வயதாகியும் தோனி இன்னும் அசாத்தியத் தருணங்களை கொடுத்து வருகிறார், அவர் இப்போது ஒரு சற்றே பிற்போக்கான பங்கை மட்டுமே வகிக்கிறார், ஆனால் அணிக்கும் ரசிகர்களுக்கும் அவரின் தாக்கம் குறையவில்லை.”

ஆகாஷ் சோப்ரா: ஒரு அணியின் சீசன் எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்றால், ‘தோனி கீழே பேட் செய்ததால்’ எனப் பலர் கேள்விக்கிடக்கலாம். ஆனால் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால உத்தி. அடுத்த தலைமுறைக்கு வழிவகுக்க ஒரு திட்டம்.”

ருதுராஜ் கைக்வாட்: கடந்த ஆண்டு தொடருக்கு ஒரு வாரம் முன், தோனி என்னிடம் வந்து, ‘இந்த வருடம் நான் கேப்டன் இல்லை. நீ தான் கேப்டன்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது. ‘முதல் போட்டியிலிருந்தா? நீங்கள் உறுதியாக சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டேன். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். ‘இது உன் அணி. நீ உன் முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனை தருவேன். அதையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை என்று சொன்னார். அந்த நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது.”

ஷேன் வாட்சன்: தோனி தனது இயல்பான தலைமைச் செயல்பாட்டை தவிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன் பதவியை வழங்கியது ஆச்சரியமானது. ஆனால், அவர் ஒரு மிருதுவான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இதை செய்திருக்கிறார்.”

ருதுராஜ் கெய்க்வாட்-ன் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

அனில் கும்ப்ளே: ரோகித் சர்மா முதன்முறையாக கேப்டன் ஆனபோது, அணியில் பல கிரிக்கெட் லெஜெண்டுகள் இருந்தனர். அதுபோலத்தான், ஒருவராக நீங்கள் அந்த பொறுப்பை எப்படி ஏற்கிறீர்கள் என்பதில்தான் நிறைய இருக்கிறது. ருதுராஜ் அதை மிக நன்றாக கையாண்டார்.”

ஆகாஷ் சோப்ரா: ஒரு பழைய கேப்டன் இன்னும் அணியில் இருந்தால், அது ஒத்துழைப்பா, இல்லையெனில் புதிய கேப்டன் உண்மையிலேயே ஆட்சி செலுத்துகிறாரா என்ற குழப்பமா? ஆனால் தோனி ஒரு தனிப்பட்ட நபர். அவர் மாற்றத்தை மிக அமைதியாக, எந்த விதத்திலும் புதிய தலைவரை ஒடுக்காமல் நிகழ்த்துகிறார்.

ராபின் உத்தப்பா: 2023 சீசன் சென்னை அணிக்கு மிகவும் சிறப்பாக இருந்தது, அதனால் தலைமை மாற்றத்துக்கு சரியான தருணம் வந்தது. ருதுராஜ் அமைதியான, சமச்சீர் அணுகுமுறையுடன் இருப்பது, தோனியை நினைவுபடுத்துகிறது. அவர் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறார்.”

ஷேன் வாட்சன்: ருதுராஜ் அபாரமாக செயல்பட்டுள்ளார். தோனி அணியில் இருந்தாலும், அது அவரின் பேட்டிங் ஆட்டத்தை பாதிக்கவில்லை. இது சென்னை அணியின் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

தோனியின் எதிர்காலம் பற்றி...

ஆகாஷ் சோப்ரா: தோனி பிந்தைய காலத்திற்கு சென்னை அணி ஏற்கனவே திட்டமிடத் தொடங்கியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் காலம் சீக்கிரம் முடிந்துவிடும்.

அனில் கும்ப்ளே: ருதுராஜ் அணியின் தலைவராக இருப்பதால், இந்த சீசனில் டோனி கூடாது என்ற நிலை ஏற்படலாம். ஆனால், ரிட்டன்ஷன் (retention) விதிகளின்படி அவர் அணியில் இருக்கலாம். இம்பேக்ட் ப்ளேயர் (Impact Player) விதியின் கீழ், அவர் மைதானத்தில் இல்லை என்றாலும், சென்னை அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.”

ஏ.பி. டிவில்லியர்ஸ்: நீண்ட காலமாக கிரிக்கெட்டில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் தோனி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் நோக்கி இழுத்தவர். இன்னும் சில ஆண்டுகள் அவர் தொடர்வதற்காக நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Ms Dhoni Anil Kumble Ab De Villiers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: