worldcup 2023 | india-vs-srilanka | icc | indian-cricket-team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் (92 ரன்), விராட் கோலி (88 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (82 ரன்) ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/3efc03ff-5a6.jpg)
தொடர்ந்து 358 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கையை பந்துவீச்சு மூலம் மிரட்டியது இந்தியா. அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/2e1aa5de-dd5.jpg)
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/37f9c25a-246.jpg)
பாக். வீரர் குற்றம் சாட்டு
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா, ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மற்ற அணிகளை விட அதிக சீம் மற்றும் ஸ்விங் ஆகும் பந்துகளை வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/975a6969-ef3.jpg)
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை சரிபார்க்கப்பட வேண்டும். அவர்கள் அதிக ஸ்விங் மற்றும் சீம் பெறுகின்றனர். முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆலன் டொனால்ட் மற்றும் மகயா என்டினி போல் பந்து வீசுகின்றனர். மும்பையில் ஷமியின் பந்தில் கிடைத்த ஸ்விங் அளவைக் கண்டு மேத்யூஸ் கூட ஆச்சரியப்பட்டார். ஐ.சி.சி அவர்களுக்கு உதவி செய்கிறது, அல்லது பி.சி.சி.ஐ அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது. இதில் மூன்றாவது நடுவரின் தலையீடும் இருக்கலாம்." என்று ஹசன் ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“