Advertisment

ஐஸ்வர்யா ராய் குறித்து பாக். முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து; கோபத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள்

பாகிஸ்தானின் உலகக் கோப்பை தோல்வி குறித்து பேசும்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து மோசமான கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மீது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

author-image
WebDesk
Nov 14, 2023 20:57 IST
New Update
Abdul Razzaq

ஐஸ்வர்யா ராய் குறித்து பாக். முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து; கோபத்தில் கொந்தளித்த நெட்டிசன்கள் Photo Source: twitter.com/ARazzaqPak

பாகிஸ்தானின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கும்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து மோசமான கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மீது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisment

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4- போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது. உலகக் கோப்பை அரை இறுதி சுற்றுக்குள் கூட நுழைய முடியாமல் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாபர் அசாமின் கேப்டன்ஷிப், சுழல்பந்து வீச்சாளர்களின் மோசமான ஆட்டம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்ச்சை என பாகிஸ்தான் கிரிக்கெட் ஒட்டுமொத்தமாக சர்ச்சையாகி உள்ளது. 

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  “தற்போது இருக்கும் ஃபார்மை வைத்துக்கொண்டு உலகின் வலுவான அணிகளை பாகிஸ்தான் வீழ்த்திவிட நினைத்தால் அது நடக்காது. பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. ஏனென்றால், இந்த உலகக் கோப்பையில் விளையாடிய ஷாஹீன் அப்ரிடி, பாபர் அசாம் ஆகியோர் மிகவும் இளமையாக உள்ளதால், இந்த அணியே அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடும்” என்று கூறினார். 

மேலும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கானின் எண்ணங்கள் குறித்து அப்துல் ரசாக் பேசும்போது, “அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது. நான் பேசுவது உங்களின் எண்ணத்தை பற்றி” என்று அப்துல் ரசாக் பேசினார். 

இப்படி சர்ச்சைக்குரிய வகையில் அப்துல் ரசாக் பேசியபோது, உடன் இருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் சிரித்து கைதட்டினர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தவறான நோக்கத்தில் கருத்து கூறியதை நெட்டிசன்களைக் கோபமடையச் செய்துள்ளது.  “இது மோசமான முன்னுதாரணம்” என்று  நெட்டிசன்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து கொந்தளித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment