Hardik Pandya Tamil News: 15- வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடருக்கான சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், துபாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடந்த லீக் சுற்று ஆட்டத்தில், 'ஏ' பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் களமாடியது.
அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பிறகு, ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று இந்திய அணி (செப்டம்பர் 4) மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி இலங்கை அணியுடனும், செப்டம்பர் 8 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டி20 வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, முதலில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பின்னர் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்து, ஆல்ரவுண்டராக ஜொலித்தார். மேலும், முகமது நவாஸின் 20-வது ஓவரின் நான்காவது பந்தில் சிக்சர் அடித்து ஆட்டத்தையும் முடித்து வைத்தார்.
ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு, ஹாங்காங்கிற்கு எதிரான அணியின் இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும், அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அவர் தற்போது தனது விருப்பமான இந்திய கிரிக்கெட் வீரர் என்று கூறி புகழ்ந்துள்ளார்.
கிரிக்கெட் பாகிஸ்தான் வலைதள பக்கத்தில் பேசியுள்ள அவர், " எனக்கு ஹர்திக் பாண்டியாவை மிகவும் பிடிக்கும். குறிப்பாக டி-20 வடிவத்தில் அவர் சரியான ஆல்-ரவுண்டராக இருக்கிறார். பாகிஸ்தானின் ஷதாப் கானைப் போலவே, ஹர்திக்கைப் பற்றி பேசுகையில், அவருக்கும் வேகம் (மணிக்கு 140 கிமீ வேகம்) உள்ளது. மின்னூட்டம் செய்யும் பீல்டரும் கூட அவ்வளவு இருக்காது. அவர் பேட்டிங்கிற்கு வரும்போது அவர் பயமில்லாமல் இருக்கிறார். நான் தவறு செய்தேன் என்று நம்புகிறேன், ஆனால் பாகிஸ்தான் தோல்வி மனப்பான்மையில் இருந்து மீள வேண்டும். நாம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் செய்வதால் அதற்கு நாம் காரணமாக இருக்கலாம். அது நியாயமில்லை. ," என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவைப் புகழ்ந்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேத், டி20 போட்டிகளில் வளர, ஹர்திக் போன்ற ஆல்ரவுண்டரை பாகிஸ்தான் அணி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜியோ டிவியில் ஆக்கிப் ஜாவேத் பேசுகையில், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஆல்-ரவுண்டர் இல்லை, அப்துல் ரசாக் எங்களிடம் இருந்ததைப் போல அவர் திறமையானவர்.
எனவே, டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வளர வேண்டுமானால், அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் டி20 போட்டிகளில், உங்களிடம் எத்தனை ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்பதுதான் முக்கியம். இந்தியாவில் ஜடேஜா மற்றும் பாண்டியா உள்ளனர். இது இந்தியாவுக்கு சாதகமாகும். பாகிஸ்தானுக்கு அதுவே பெரிய விடுபட்ட இணைப்பாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.