India Vs England, 4th Test, Ranchi | Jasprit Bumrah: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
30 வயதான பும்ரா, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற விசாகப்பட்டினம் 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஒரு அற்புதமான சிக்ஸர் உட்பட 45 ரன்களும், 2 இன்னிங்ஸ்களில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்தத் தொடரில் பும்ரா 80.5 ஓவர்கள் பந்துவீசி 13.65 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பும்ரா ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதால், ராஞ்சி ஆடுகளத்தின் தன்மையை மனதில் கொண்டு இந்தியா மாற்று வீரரை களமிறக்கக்கூடும். பாரம்பரியமாக, சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆடுகளத்தில், இந்தியா பும்ராவுக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் அல்லது நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் சேர்க்கலாம். அந்த வகையில், ராஞ்சி டெஸ்டில் பும்ராவுக்கு மாற்று வீரராக இந்தியாவிடம் உள்ள விருப்பங்களை இங்கு பார்க்கலாம்.
முகேஷ் குமார்
30 வயதான பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் இதுவரை தனது மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அவர் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் வெற்றியின் போது (இரண்டு இன்னிங்ஸ்களில் 1/70) முகேஷ் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார். பின்னர் மேற்கு வங்க அணியின் கடைசி ரஞ்சி டிராபி லீக் போட்டிக்காக விடுவிக்கப்பட்டார்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தனக்குச் சாதகமான சூழ்நிலைக்குத் திரும்பிய முகேஷ், பீகாருக்கு எதிராக 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தது உட்பட, தனது முதல்-தர 10-விக்கெட் ஆட்டத்தை (10/50) பதிவு செய்தார். இரு வேகப் பாதைகளில் சிறப்பாகச் செயல்படத் தெரிந்த முகேஷ், பும்ராவுக்குப் பதிலாக இந்தியா வேகப்பந்துவீச்சு (சீம்-ஃபர்-சீம்) மாற்றத்தை தேர்வுசெய்தால், அவர் ஆடும் லெவன் அணியில் மீண்டும் இடம் பெறலாம்,
ஆகாஷ் தீப்
இந்த தொடரின் இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு தனது முதல் இந்திய அழைப்பைப் பெற்றதால், ஆகாஷ் தீப்பும் ராஞ்சி டெஸ்டில் சிராஜுடன் ஒரு சீம் விருப்பமாக கலக்கலாம். 27 வயதான பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான அவர் சமீபத்தில் அகமதாபாத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக இரண்டு சிவப்பு -பந்து போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷுடன் சேர்ந்து, ஆகாஷ் சமீபத்திய ஆண்டுகளில் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் பெங்கால் அணியின் முன்னணி வீரராக இருந்து வருகிறார். ஆகாஷ் 30 முதல் தர ஆட்டங்களில் 23.58 சராசரியுடன் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர்
வெள்ளியன்று நடைபெறும் டெஸ்டின் தொடக்க நாளிலிருந்து ராஞ்சி ஆடுகளம் சுழலுக்கு உதவியாக இருந்தால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கூடுதல் ஸ்பின்னரை தேர்வு செய்யலாம். எனவே, பும்ராவின் இடத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் அல்லது ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை இந்தியா தேர்வு செய்யலாம்.
மூன்று வகையான சுழற்பந்துவீச்சார்கள் தேவை என்பதால், அக்சர் படேல் (133 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள்) மூன்றாவது டெஸ்டில் கைவிடப்பட்டார். அதேவேளையில், இங்கிலாந்தின் கடைசி சுற்றுப்பயணத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சுந்தர் ஒரு டெஸ்டில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG: Four contenders who could fill in if Jasprit Bumrah is rested for Ranchi Test against England
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“