/indian-express-tamil/media/media_files/IHiofpaIrnfAqhUlIi7W.jpg)
யு20, 20 வயதிற்குட்பட்ட உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 27 முதல் 31 வரை பெரு நகரின் லிமாவில் நடைபெறுகிறது. இதில் 43 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் (பெண்கள் 100மீ ஓட்டப் பந்தயம் மற்றும் பெண்கள் 4x100மீ தொடர் ஓட்டம்), கார்த்திக் ராஜா (ஆண்கள் 400மீ தடை ஓட்டம்), ஹரிஹரன் கதிரவன் (ஆண்கள் 110மீ தடை ஓட்டம்) மற்றும் கனிஸ்டா டீனா (பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்) ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 18 வயதான அபிநயா, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் (வெவ்வேறு வயது பிரிவுகளில்) மூன்று முறை பங்கேற்றுள்ளார். உலக தடகளப் போட்டியில் அவர் பங்கேற்பது முதல் முறை ஆகும்.
அபிநயா கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் நடந்த ஆசிய ஜூனியர் போட்டியில் 100 மீட்டர் போட்டியில் தகுதி பெற தவறவிட்டேன், ஆனால் உலக ஜூனியர் தடகளத்திற்கான தகுதி போட்டியில் பெங்களூருவில் நடந்த போட்டியில் நான் தகுதி மதிப்பெண்ணை (11.78 வினாடிகள்) தாண்டி உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றேன்.
/indian-express-tamil/media/media_files/aE8EzHPveMMuyQYShHPO.webp)
இந்த முறை முழுமையாகப் பயன்படுத்துவேன். எனது சிறந்த ஓட்டமான 10.60 வினாடிகளை முறியடித்து இறுதிப் போட்டிக்கு செல்வதே இலக்கு" என்று கூறினார். இந்தியா சார்பில் யு20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் பங்கேற்கும் ஒரே பெண் இவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us