scorecardresearch

சூப்பர் வாய்ப்பு: சென்னையில் இலவச வாலிபால் பயிற்சி; பெண்களுக்கு தனி ஏற்பாடு

கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கி உள்ளது. வருகின்ற மே 21ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும்.

வாலிபால் பயிற்சி

கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கி உள்ளது. வருகின்ற மே 21ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும்.

சென்னை வாலிபால் அகாடமி இலவச வாலிபால் பயிற்சியை வழங்க உள்ளது. இதற்காக கோடைகால இலவச பயிற்சி முகாமல் தொடங்கி உள்ளது. இந்நிலையில்  சென்னை பரங்கிமலையில் உள்ள, மோஹித் பூங்காவில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு தனியாக பயற்சி வழங்கப்படுகிறது. 7 முதல் 19ம் வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

காலையில் 6.30 முதல் 8.30 மணிவரைக்கும். மாலை 4 மணி முதல் 6 மணி வரைக்கும் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பயிற்சி முகாம் வரும் மே 21ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Free volleyball camp in chennai